• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

செல்வ விநாயகர் ஆலய மகா கும்பாபிசேகம்..,

ByM.JEEVANANTHAM

May 9, 2025

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை வெங்கடேஸ்வரா நகரில் அமைந்துள்ளது. இந்த ஆலய மகாகும்பாபிசேகம் மிக சீரும் சிறப்பு மாக இன்று நடைபெற்றது. இந்த மகா கும்பாபிசேகத்தை முன்னிட்டு கடந்த 7-ந் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கி புனித நீர் கடங்களை வைத்து யாகசாலை அமைத்து நான்கு கால யாக பூஜை நடைபெற்றது.

இன்று சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஒதி நான்காம் கால யாக பூஜை முடிந்து பூரர்னாஹீதி நடைபெற்று தீபாரதனை நடைபெற்றது. பின் புனித நீர் கடங்களை சிவாச்சாரியார் தலையில் சுமந்து மேல தாள வாத்தியங் கள் மல்லாரி வாசிக்க மந்திரங்கள் முழங்க புனித நீர் கடங்கள் கோபுர விமான கலசத்தை அடைந்து, கடங்களில் உள்ள புனித நீரை கோபுர கலசத்தில் ஊற்றி மகா கும்பாபிசேகம் மிக சீரும் சிறப்பு மாக நடைபெற்றது. இந்த மகர கும்பாபிசேகத்தை கான ஏராளமாக பக்தர்கள் குவிந்து கும்பாபிசேகத்தை கண்டு செல்வ விநாயகரின் அருளை பெற்றனர்.