மாணவர்கள், பெற்றவர்கள் மற்றும் ஆசிரியரிடம் நன்றியுடனும், விசுவாசத்துடனும் நடந்து கொள்ளுங்கள். அது உங்கள் வாழ்க்கையில் உதவியாக இருக்கும். பெற்றோரும் ஆசிரியரையும் கண்ணியப்படுத்துமாறு நடந்து கொள்ளுங்கள். அவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நீங்கள் நடந்து கொள்ளுங்கள். எந்த துறையினை தேர்ந்தெடுத்தாலும் அந்த துறையில் வெற்றி பெற வேண்டும், சாதனை புரிய வேண்டும் என உயர் நீதிமன்ற தலைமை வழக்கறிஞர் வீரகதிரவன் கூறினார்.
மதுரை வேலம்மாள் வித்யாலாய பள்ளி 15 ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. மாணவிகள் சந்தனம், குங்குமம், மலர்கள் வழங்கி வரவேற்க ஆசிரியர்கள் நல்வரவு கூற புதுமை நிகழ்வாக அமைந்தது.
மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி அருகே அமைந்துள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியின் 15ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி முதல்வர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். முதன்மை செயல் அலுவலர் வேல்முருகன் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் வேல்மோகன் இயக்குனர் சசிகுமார் வரவேற்புரை கூறினர். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சென்னை உயர் நீதிமன்ற மதுரை பென்ஸ் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீர கதிரவன் மதுரை விமான நிலைய துணை பொது மேலாளர் அருண் மோகன், மத்திய தொழில் பாதுகாப்பு படை முதன்மை கமாண்டன்ட் சங்கர் குமார் ஷா, ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மதுரை உயர்நீதிமன்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீர கதிரவன் மாணவரிடம் பேசுகையில்..,
மாணவர்களே நீங்கள் மற்றவரிடம் பேசும் போது நிதானமாகவும், கனிவாகவும் பேசுங்கள் அது உங்களை வளமாக்கும்.
அதே போல் மாணவர்களின் பெற்றோர்களாகிய நீங்களும் குழந்தைகளிடம் கனிவாகவும், அன்பாகவும் பேசுங்கள், அன்பாக நடந்து கொள்ளுங்கள். இதன் மூலம் அவர்களின் கல்வி வழிகாட்டுதலுக்கு உதவியாக இருக்கும்.
நீங்கள் சரியான கல்வி மையத்தில் உங்கள் குழந்தையை சேர்த்துள்ளீர்கள். உங்களைப்போல் சரியான கண்காணிப்பும், கவனமும் இந்த பள்ளியிலும் இருக்கும். பள்ளி வாழ்க்கை என்பது ஒரு பொற்கால வாழ்க்கை நாம் திரும்பிப் பார்க்கும்போது அது நமக்கு வசந்தமாக தெரியும்.
மாணவர்களே நீங்கள் எதை வேண்டுமானாலும் இந்த வயதில் சாப்பிடுங்கள். ஆனாலும் உடல் நிலையை பக்குவப்படுத்திக் கொள்ள சீராக்கிக் கொள்ள உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
.நல்ல வாழ்வு வாழ வேண்டும் என்றால் ஆரோக்கியமான திடகாத்திரமான உடல் நிலை வேண்டும். உங்கள் பெற்றோர்களையும், உங்கள் ஆசிரியர்களையும் என்றென்றும் அவர்கள் மனம் குளிரும் வண்ணம் நடந்து கொள்ளுங்கள்.

என்றும் அவர்களிடத்தில் நன்றியுடன், விசுவாசத்துடனும் நடந்து கொள்ளுங்கள். அது உங்கள் வாழ்க்கையில் உதவியாக இருக்கும். பெற்றோரும், ஆசிரியரையும் கண்ணியப்படுத்துமாறு நடந்து கொள்ளுங்கள். அவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நீங்கள் நடந்து கொள்ளுங்கள். எந்த துறையினை தேர்ந்தெடுத்தாலும் அந்த துறையில் வெற்றி பெற வேண்டும் சாதனை புரிய வேண்டும் என உயர் நீதிமன்ற தலைமை வழக்கறிஞர் வீரகதிரவன் கூறினார்.