• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரை பா.ஜ.க. தலைவர் மீது 6 பிரிவுகளில் வழக்கு

ByA.Tamilselvan

Oct 10, 2022

மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நாக்கை துண்டாக,வெட்டி வீசுவோம் என பேசிய பாஜக தலைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மணிப்பூர் கவர்னர் இல.கணேசன் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணம் அடைய வேண்டி தமிழகம் முழுவதும் பா.ஜ.க.வினர் கோவில்களில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட தலைவர் மகா. சுசீந்திரன்பேசும் போது… இனிமேலும் பொறுத்துக் கொள்ள மாட்டோம். இந்து மதத்தையும், கடவுள்களையும் அசிங்கமாக பேசுபவர்களின் உடலில் நாக்கு இருக்காது. அதனைத் துண்டு துண்டாக வெட்டி வீசுவோம் என்றார். இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில் மகா. சுசீந்திரன் மீது, சிலைமான் போலீசார், பொது இடத்தில் அவமரியாதையாக பேசியது, சட்டம்-ஒழுங்கு, அமைதிக்கு குந்தகம் விளைவித்தது, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பேசியது, தொண்டர்களை வன்முறைக்கு தூண்டியது உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.