• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரை விமான நிலைய விரிவாக்க நிலம் கையகப்படுத்தும் விவகாரம்

ByKalamegam Viswanathan

Nov 27, 2024

மதுரை விமான நிலைய விரிவாக்க நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் 30க்கும் மேற்பட்ட ஒரே சமுதாய கிராமத் தலைவர்கள் ஒன்று கூடி சின்ன உடைப்பு கிராமத்தில் தீர்மானம் நிறைவேற்றும்.

மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்காக அருகில் உள்ள சின்ன உடைப்பு கிராமத்தில் நிலம் கையகப்படுத்துவதற்காக கடந்த வாரம் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆயிரம் பாதுகாப்பு வருகை தந்தனர்.

சின்ன உடைப்பு கிராம மக்கள் தங்களுக்கு மீள்குடியேற்றம் மாநகராட்சி பகுதியின் மூன்று சென்ற இடம் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து நிறைவேற்ற பின்பு நலத்தை கையகப்படுத்திக் கொள்ளுமாறு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனுடைய உயர்நீதிமன்ற மதுரை கலையில் இது தொடர்பாக வழக்கு போடப்பட்டு முறையாக நோட்டீஸ் வழங்கிய பிறகு நிலத்தை கையகப்படுத்த வேண்டும் அதுவரை நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என நீதிபதி உத்தரவிட்டு வரும் 11ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

சின்ன உடைப்பு கிராம மக்களின் பிரச்சனையை மதுரை மாவட்டத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட ஒரே சமுதாய தலைவர்கள் இன்னும் உடைப்பு கிராமத்தில் ஒன்றிணைந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

இதில் எந்த ஒரு நோட்டீஸ் முன்னறிவிப்பு இன்றி வீடுகளை எடுக்க வந்த அதிகாரிகள் மற்றும் போலீசாரை கண்டித்தும், 2013 நில எடுப்பு சட்டத்தின்படி மீள்குடியேற்றம் செய்த பிறகு நலத்தை கையகப்படுத்த வேண்டும், உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்கு வரை கிராமத்துக்குள் காவல்துறை வரக்கூடாது, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த வருவாய்த்துறை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.