• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சென்னையில் மெட்ராஸ் வாரம் கொண்டாட்டம்..!

Byவிஷா

Aug 18, 2023

சென்னையில் ஆகஸ்ட் 21 முதல் 7 நாட்களுக்கு மெட்ராஸ் வாரம் கொண்டாட்டம் நடைபெற உள்ளது.
சென்னை தினத்தை கொண்டாடும் விதமாக வருகின்ற ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் 7 நாட்களுக்கு மெட்ராஸ் வாரம் என்ற தலைப்பில் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டியது சென்னை வாசிகள் அனைவரின் கடமையாகும். சென்னையில் உள்ள ஒவ்வொரு தெருவின் வரலாறும் அங்கு பல ஆண்டுகள் வசிக்கும் குடும்பங்களுக்கு மட்டும்தான் தெரியும்.
அந்த வரலாற்றை அந்த பகுதி மக்கள் யாரும் மறக்காமல் சென்னை தினத்தில் கொண்டாட வேண்டும். ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்னை தினத்தை முன்னிட்டு இந்த வருடம் மெட்ராஸ் வாரம் என்ற தலைப்பில் ஆகஸ்ட் 21 முதல் ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்கு சென்னையின் பாரம்பரியங்கள் குறித்து பல்வேறு பிரபலங்களின் சிறப்பு கலந்துரையாடல்கள் நடைபெறும்.
இது தினமும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் எனவும் இதற்கான முன்பதிவு கட்டணம் எதுவும் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு 9841049155, 9840085411 ஆகிய கைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.