• Tue. Feb 24th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

மெட்ராஸ் மாடர்ன் டூரிஸம் நிறுவனம்! கோவையில் நடைபெற்ற நெகிழ்ச்சி சம்பவம்..,

BySeenu

Feb 24, 2026

துபாய் நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக, சுற்றுலா துறையில் சாத்னை படைத்து வரும், மெட்ராஸ் மாடர்ன் டூரிஸம் நிறுவனம், கோவை செல்வபுரம் பகுதியில் துவங்கி, ஓரு ஆண்டை நிறைவு செய்துள்ளது.

இதனை விழா போல இந்நிருவனம் கொண்டாடியது, இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக சின்னத்திரை நட்சத்திரம் புகழ் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி வைத்தும், கேக் வெட்டியும், ஒரு ஆண்டை கடக்க உறுதுணையாக இருந்த வாடிக்கையாளர்களுக்கு இனிப்புகள், மற்றும் பரிசுகளை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மெட்ராஸ் மாடர்ன் டூரிஸம் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜேஸ்வரி பெருமாள் செய்தியாளர்களிடம் கூறியதாவது..
சர்வதேச டூர் பேக்கேஜ், குடும்ப சகிதம் மற்றும் குழு சகித பேக்கேஜ், டொமெஸ்டிக் டூர் பேக்கேஜ், உலக அளவிலான விசா சேவைகள், விமானம், பஸ், ட்ரைன் உள்ளிட்டவைகளுக்கான டிக்கெட் புக்கிங், ட்ராவல் இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை சிறந்த முறையில் இங்கு வழங்கி வருவதாகவும், நமது நிறுவனம் மூலமாக இது வரை 300க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வெளிநாடுகளுக்கும் ஆயிரக்கணக்கானோர், உள்ளுர் சுற்றுலா வும் சென்று மகிழ்ச்சியுடன் திரும்பி வந்துள்ளனர். அவ்வாறு எங்களது வளர்ச்சிக்கு வித்திட்ட வாடிக்கையாளர்களை பெருமை படுத்தும் நிகழ்ச்சியாக இந்த விழா நடைபெற்று வருகின்றது என தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சின்னதிரை நட்சத்திரம் புகழ் கூறியதாவது..

நான் எங்கு சென்றாலும் எனக்கு அனைத்து டிக்கெட்களையும் இந்த நிறுவனம் மூலமாகவே செய்து கொள்கிறேன் நீங்களும் ஆதரவு தாருங்கள் என்றார். மேலும் தற்போது, சின்ன சின்ன பட்ஜெட்களில் ஆயிரகணக்கான திரைப்படங்கள் ஒடிடியில் வெளியாகி வருகின்றது. இதன் மூலம் சினிமா துறை பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது, மேலும் நடிப்பு திறன் கொண்ட பலரது திறன் இதன் மூலமாக வெளிவந்துள்ளது. இதை நான் வரவேற்கிறேன் என்றார். மேலும் சினிமா என்பது எனது உயிர், திரையுலகில், சின்ன சின்ன படங்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்க முன்வர வேண்டும் என்பதே எனது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது என்றார்.