• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

“மத்தகம்”ஆகஸ்ட்-18 முதல் ஸ்ட்ரீமாகிறது…

Byஜெ.துரை

Aug 6, 2023

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார்,  தங்களது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மத்தகம்”  சீரிஸின் ட்ரெய்ல்ரை சமீபத்தில் வெளியிட்டது. ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஒரிஜினல் சீரிஸ் வரும் ஆகஸ்ட் 18 முதல்  டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.

இயக்குநர் பிரசாத் முருகேசன் எழுதி இயக்கியுள்ள “மத்தகம்” சீரிஸில் நடிகர் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் மற்றும் டிடி (திவ்யதர்ஷினி) முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நேற்று வெளியிடப்பட்ட டிரெய்லர், அதர்வா மற்றும் மணிகண்டனின், இதயம் அதிரச்செய்யும் ஆக்சன் அதிரடியில், ஒரு அட்டகாச பொழுதுபோக்கை இந்த சீரிஸ் தருமென்பதை உறுதி செய்துள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய ஏழு மொழிகளில் இந்த சீரிஸ் ஒளிபரப்பாகவுள்ளது.

சமீபத்தில் திரையில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ” குட் நைட் ” திரைப்பட கதாநாயகன் மணிகண்டன் முதல் முறையாக வில்லனாக நடிக்கும் இந்த சீரிஸில் அதர்வா நேர்மை மிகுந்த போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

இந்த சீரிஸில் பிரபல இயக்குநர் கவுதம் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு, வடிவுக்கரசி, அருவி திருநாவுக்கரசு, மூணாறு ரமேஷ், சரத் ரவி, ரிஷி காந்த் மற்றும் முரளி அப்பாஸ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து  நடித்துள்ளனர்.

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மத்தகம்” சீரிஸை Screen Scene Media Entertainment நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த வெப் சீரிஸுக்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார், எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் ஆண்டனி எடிட்டிங் செய்துள்ளார்.

இந்த சீரிஸுன் பரபரப்பான ஆக்சன் காட்சிகளைப் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் அமைத்துள்ளார். சுரேஷ் கல்லரி கலை இயக்கம் செய்துள்ளார். 

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரு முன்னணி ஸ்ட்ரீமிங் ஓடிடி தளமாகும். இது இந்தியாவில் பொழுதுபோக்கு, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் வெற்றிகரமாக ஸ்ட்ரீம் செய்யும் மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் வழங்கி, மக்கள் பார்க்கும் விதத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.  டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளமானது சுமார் 8 மொழிகளில் 1,00,000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான ஸ்லாட்டுகளை உலகம் முழுவதிலிருந்து வழங்கி வருகிறது.