• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

விண்ணில் பாய்ந்தது ‘எல்.வி.எம்3-எம்3 ராக்கெட்’

ByA.Tamilselvan

Mar 26, 2023

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த எல்.வி.எம்.3 ராக்கெட் செயற்கைகோள்களை சுற்றுவட்டபாதையில் நிலை நிறுத்தியது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனியார் செயற்கைக்கோள்களை ஒப்பந்த அடிப்படையில் விண்ணிற்கு அனுப்பி வருகிறது. அதனடிப்படையில், இங்கிலாந்தைச் சேர்ந்த ஒன் வெப் நிறுவனத்தின் 72 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோவில் வணிகப் பிரிவான நியூ ஸ்பேஸ், இந்தியாவுடன் ஒப்பந்தம் கொண்டுள்ளது.
அதன்படி, கடந்த ஆண்டு அக்டோபரில் 36 செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன. மீதமுள்ள 36 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில், 5 ஆயிரத்து 805 கிலோ மொத்த எடை கொண்ட செயற்கைக்கோள்களை LVM3-M3 ராக்கெட் விண்ணிற்குச் சுமந்து சென்றது. இதற்கான 24 மணி நேர கவுண்டன் தொடங்கப்பட்டு இன்று காலை 9 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது.
இந்த செயற்கைக்கோள்கள், 450 கிலோ மீட்டர் தொலைவில், 87.4 டிகிரி கோணத்தில் புவி சுற்று வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளன.