• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஐபிஎல்-ல் புதிதாக இணைந்துள்ள ‘லக்னோ’ அணி…

Byகாயத்ரி

Jan 25, 2022

ஐபிஎல் கிரிக்கெட்டில் புதிதாக இணைந்துள்ள லக்னோ அணிக்கு ‘லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 15ஆவது தொடர் இந்தாண்டு மார்ச் மாதம் இறுதியிலிருந்து மே மாத இறுதி வரை நடைபெறும் என பி.சி.சி.ஐ. அறிவித்தது.

இந்த தொடரில் புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் அறிமுகமாகின்றன.லக்னோ அணியின் பயிற்சியாளராக ஆன்டி பிளவர் மற்றும் ஆலோசகராக கௌதம் கம்பீர் ஆகியோர் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டனர்.

ஏலத்துக்கு முன்பாக இரு அணிகளும் தேர்வு செய்துள்ள வீரர்களின் பட்டியலும் அண்மையில் வெளியிடப்பட்டது.

லக்னோ அணி கே.எல் ராகுலை ரூ.17 கோடிக்கு தேர்வு செய்துள்ளது. இவர் அந்த அணியின் கேப்டனாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்கஸ் ஸ்டாய்னிஸ் (ரூ.9.2 கோடி) மற்றும் ரவி பிஷ்னாய் (ரூ.4 கோடி) ஆகியோரும் அந்த அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் லக்னோ அணிக்கு ‘லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றபோது புனே அணியை பெற்றிருந்த சஞ்சீவ் கோயங்கா அதற்கு ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் எனப் பெயர் சூட்டியிருந்தார்.

இந்நிலையில், தற்போது லக்னோ அணியை பெற்றுள்ள கோயங்கா, இதற்கும் சூப்பர் ஜெயன்ட் என்றே பெயர் சூட்டியுள்ளார்.