தமிழகத்தில் மருத்துவமனைகள் கல்விக்கூடங்கள் முதியோர் காப்பகங்கள் குழந்தைகள் காப்பகங்கள் ஆகியவற்றுக்கு அருகில் அதிக ஒலி எழுப்பும் ஒலிபெருக்கிகள் அமைக்க தடை செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பொதுக்கூட்டங்கள் மற்றும் திருவிழாக்களின் போது ஒலிபெருக்கி அமைக்க காவல்துறையில் அனுமதி பெறும்போது மருத்துவமனை மற்றும் கல்விக்கூடங்களுக்கு அருகில் ஒலிபெருக்கி அமைக்க அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக உயர் நீதிமன்றங்களும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதையெல்லாம் மீறி 3.9.2025 அன்று குழித்துறை அரசு தலைமை மருத்துவமனையின் உள்பகுதியில் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கும் கட்டடத்தில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலிபெருக்கிகள் பயன்படுத்தி பணி நேரத்தில் பெண் ஊழியர்கள் குத்தாட்டம் நடத்திய காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஒலி பெருக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ள அதே தளத்தில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு”* செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது நோயாளிகளும் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதனால் சிகிச்சை இருந்த நோயாளிகள் பலருக்கு அதிக சத்தத்தின் காரணமாக பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இதற்கு காரணமான மருத்துவமனை பணியாளர்கள் யார் அந்த மருத்துவமனையின் உறைவிட மருத்துவர் இதற்கு எப்படி அனுமதி கொடுத்தார். மாவட்ட சுகாதாரத் துறையும் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் மருத்துவமனையில் சிகிச்சை பிரிவு கட்டடங்களில் இது போன்ற நிகழ்வுகளுக்கு எப்படி அனுமதி அளிக்கிறது என்பது போன்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. இந்த மருத்துவமனையின் முன்பு வாவு பலி பொருட்காட்சி சமயத்தில் கூட ஒலிபெருக்கி அமைக்க தடை செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மருத்துவமனைக்கு உள்ளேயே இப்படி ஒரு சம்பவம் நடந்ததால் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருந்த பல நோயாளிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். எந்த பண்டிகையானாலும் மருத்துவமனை வளாகத்தில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தி குத்தாட்ட நிகழ்வு நடத்துவது என்பது நடக்காத ஒன்று. ஆனால் குமரி மாவட்டம் குழித்துறை அரசு தலைமை மருத்துவமனையில் இது போன்ற ஒரு மோசமான நிகழ்வு தற்போது நடந்து உள்ளது அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டு இருந்த நோயாளிகளுக்கு பெரும் இன்னலை ஏற்படுத்திய நிலையில் அது தொடர்பான வீடியோக்கள் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக மருத்துவமனைகள் அமைந்திருக்கும் சாலைகளில் கூட ஒலி எழுப்பக் கூடாது என வாகனங்களுக்கு சமிச்சை பலகைகள் கூட வைக்கப்பட்டு சாலைகளில் செல்லும் வாகனங்கள் கூட மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அமைந்து இருக்கும் பகுதிகளில் ஹாரன்களை பயன்படுத்தாமல் செல்வது கூட நிகழ்வாக உள்ளது. இந்த நிலையில் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் கட்டடத்தின் உள்ளேயே ஒலிபெருக்கி வைத்து அதில் பாட்டுகளை அதிக சத்தத்துடன் போட்டு அந்த மருத்துவம் பணியாளர்கள் குத்தாட்டம் போட்டது மிகவும் வேதனையாக உள்ளதாகவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்துவதாகவும் அமைந்ததாக கூறப்படுகிறது.
ஆகவே மருத்துவமனைக்குள் ஒலிபெருக்கி அமைக்க அனுமதி கொடுத்த அலுவலர்கள் மற்றும் அந்த பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட மருத்துவப் பணியாளர்கள் மற்றும் இதுபோன்ற தகாத நிகழ்வுகள் நடக்க அனுமதித்த மருத்துவமனையின் முக்கிய அதிகாரிகள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற சீரழிவுகளை தடுக்க இயலும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.