• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

மண்சரிவில் சிக்கிய லாரி..,

BySeenu

Mar 13, 2026

கோவை மாநகராட்சி போத்தனூர் பகுதி பள்ளிவாசல் சாலையில் தண்ணீர் குழாய் உடைந்து அதிகளவிலான தண்ணீர் வெளியேறி உள்ளது. இதனால் தார் சாலைக்கு கீழே மண் அரிப்பு ஏற்பட்டதால் சில வாகன ஓட்டிகள் அந்த ஒருபுற சாலையை பயன்படுத்தாமல் மற்றொரு வழியை பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் அவ்வழியே தனியார் லாரி ஒன்று சென்ற நிலையில் ஏற்கனவே தண்ணீர் குழாய் உடைந்து மண்ணரிப்பு ஏற்பட்டதன் காரணமாக பாரம் காரணமாக அந்த லாரி மண் சரிவில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுநர் லாரியிலிருந்து வெளியேறி உயிர் தப்பினார்.

சுமார் பாதி அளவிலான லாரி மண்சரிவில் சிக்கிய நிலையில் அதனை வெளியேற்றும் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது அதன் பிறகு உடைந்த தண்ணீர் குழாய் சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.