• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கூழாங்கற்களை கடத்திய லாரி பறிமுதல்- டிரைவர் கைது

திருச்சி அருகே அரசு அனுமதி இல்லாமல் கூழாங்கற்கள் கடத்தல் போலீசார் லாரி பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
திருச்சி மாவட்டம் திருச்சி மண்டல புவிசார் பிரிவிக்கு அரியலூர் மாவட்ட பகுதிகளில்.  அரசு அனுமதி இல்லாமல் கூழாங்கற்களை லாரியில் கடத்துவதாக கிடைத்த ரகசியதகவலின் பேரில் மண்டல உதவி புவியாளர் நாகராஜன் தலைமையிலான பறக்கும் படையினர்.ஜெயங்கொண்டம் அருகே கும்பகோணம்  – விருத்தாச்சலம் நெடுஞ்சாலை. ஆண்டிமடம் சுகாதார நிலையம் அருகே  வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த டிப்பர் லாரியை  நிறுத்தி  சோதனை செய்த போது,  எவ்வித அனுமதியும் இல்லாமல் சுமார் 3 யூனிட் அளவுள்ள கூழாங்கற்களை  லாரியில் கடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து லாரி டிரைவரை பிடித்து விசாரித்ததில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தாலுக்கா நரியப்பட்டு முருகன் கோவில் தெருவை சேர்ந்த ஜெயவேல் (24) என்பது தெரியவந்தது.  இதுகுறித்து மண்டல உதவி புவியாளர் நாகராஜன் டிப்பர் லாரியுடன் கூழாங்கல் மற்றும் லாரி  டிரைவர் ஜெயபாலை  ஆண்டிமடம் போலீசில் ஒப்படைத்து புகார் அளித்ததின் பேரில்  போலீசார் கூழாங்கற்களை ஏற்றி வந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்து  டிரைவர் ஜெயவேலை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.