சிவகாசியைச் பகுதியில் சமீபத்தில் எம்.சாண்ட் மணல், ஜல்லிக்கற்கள் ஆகியவற்றின் விலை ஒரு யூனிட்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டதை கண்டித்து லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்டுமான பொருள்களின் திடீர் விலை உயர்வால் விற்பனை பாதித்து தங்களது லாரி இயக்கும் தொழில் பாதிக்கப்படுவதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கட்டுமான பொருட்களின் உற்பத்தியாளர்கள் தரப்பிலிருந்து லாரி ஓட்டுநர்களுக்கு வழங்கப்பட்டு வந்த படிக்கூலி வழங்குவதை கடந்த ஒரு வாரமாக கட்டுமான பொருட்கள் உற்பத்தியாளர்கள் நிறுத்தி வைத்துள்ளதை மீண்டும் வழங்கிடவும் ஓட்டுனர்கள் வலியுறுத்தியுள்ளனர். சுமூகத் தீர்வு ஏற்படும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.








