கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக சென்ற லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதில் அடுத்த ஆண்டு தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை பொது பாடத்திட்ட புத்தகங்களை ஏற்றி வந்த நாகர்கோவில் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கணபதி லாரியின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் லாரி ஓட்டுநர் தலையில் அடிபட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து வேப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.