குமரி மாவட்டத்தில் இன்று மூன்று தாலுகாக்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை ஸ்ரீ நாராயண குருவின் 170_வது பிறந்த நாள் விழாவிற்கு ஆட்சியர் அழகுமீனா அறிவித்துள்ளார்.
திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் மக்கள் மத்தியில் சமத்துவத்தை போதித்த ஸ்ரீ நாராயண குருவின் பிறந்த நாளுக்கு கேரள அரசு வெகு காலமாக விடுமுறையை அனுமதித்துள்ளது.

குமரி மாவட்டத்தில் உள்ள எஸ்.என்.டி.பி. என்ற அமைப்பு வெகுகாலமாக நாராயண குருவின் பிறந்த நாள் அன்று குமரி மாவட்டத்திற்கு விடுமுறை வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வந்துள்ளது.
நாராயண குரு கேரள மக்களின் மத்தியில் ஒரு சமூகபுரட்ச்சியின் போராளியாக திகழ்ந்தார். மதங்களால் மனித இனம் வேறுபடக்கூடாது, மக்கள் மத்தியில் சமத்துவம், சமாதானம் நிலவ வேண்டும் என்பதை அவரது இறுதி நாள் வரை போதித்த மதம் காடந்து மானிடத்தை போற்றினர்.

குமரி ஆட்சியர் அழகு மீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில். குமரி மாவட்டத்தில் முதல் முறையாக நாராயண குருவின் பிறந்த நாள் ஆன இன்று (ஆகஸ்ட்_20)ம் நாள் குமரி மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாக்களில். அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு, திருவட்டார் ஆகிய தாலுகாக்களுக்கு மட்டும் இன்று உள்ளூர் சிறப்பு விடுமுறை விடப்பட்டுள்ளது, மற்ற தாலுகாக்களில் உள்ள அரசு மற்றும் பள்ளிகள் வழக்கம் போல் செயல் படுகிறது. இன்றைய உள்ளூர் விடுமுறை காக்க, அடுத்த மாதம் (செப்டம்பர்_14)நாள் வேலை நாளாகவும் ஆட்சியர் அழகு மீனாவின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாராயண குருவின் 170_வது பிறந்த தினத்தில் விடுமுறையை அனுமதித்த ஆட்சியருக்கு எஸ்.என்.டி.பி அமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளதுடன். அவர்களின் கோரிக்கைக்காக பரிந்துரை செய்த தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோருக்கு எஸ்.என்.டி.பி சார்பில் நன்றி தெரிவித்து உள்ளார்கள்.