• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சிறுவர் சிறுமிகளுக்கான லிட்டில் செஃப் போட்டி …

Byஜெ.துரை

May 26, 2024

சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள லிட்டில் ஏஞ்சல்ஸ் ஃபோனிக்ஸ் என்ற தனியார் சென்டரில் குழந்தைகளுக்கான கோடைகால சிறப்பு தனி திறமை பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

வகுப்புகள் நிறைவு தினத்தை முன்னிட்டு குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் லிட்டில் செப் என்ற தலைப்பில் நெருப்பில்லாமல் உணவு பொருட்களை வைத்து சமைக்கும் சமையல் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் குழந்தைகள் ஆர்வமுடன் பல உணவு பொருட்களை தட்டுகளில் வைத்து பல்வேறு விதமான உணவுப் பொருட்களை தயாரித்து செய்து காட்டினர்.

பின்னர் அந்த உணவுப் பொருட்களை எவ்வாறு தயார் செய்தோம் என்று ஆங்கிலத்தில் எடுத்துரைத்தனர்.

இது குறித்து பேசிய ஏஞ்சல்ஸ் ஃபோனிக்ஸ் சென்டர் நிறுவனர் ஏஞ்சலின்…..

குழந்தைகளின் தனித்திறமையை வெளிக் கொண்டு வருவதற்கும் அவர்களை ஆங்கிலத்தில் சரளமாக பேச வைப்பதற்கும் உண்டான முயற்சி தான் இது என்று தெரிவித்துள்ளார்.

இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தனியார் தொலைக்காட்சியை சேர்ந்த ஜெயந்தி கலந்து கொண்டு சிறுவர் சிறுமிகளுக்கு பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினார்.