• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கோவை ராயல் கேர் இன்ஸ்ட்டியூட் ஆப் நர்சிங் கல்லூரியின் விளக்கேற்றும் விழா

BySeenu

Feb 18, 2024

செவிலியத் துறையின் முன்னோடியான ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரை நினைவு கூறும் விதமாக,செவிலியர் பட்டபடிப்பு மற்றும் பட்டயப்படிப்பு பயிலும் செவிலியர் மாணவிகள், விளக்கிளை கையில் ஏந்தி உறுதி மொழி எடுத்து கொள்வதை ஒவ்வொரு செவிலியர் கல்லூரிகளும் மரபாக பின்பற்றி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை ராயல் கேர் இன்ஸ்ட்டியூட் ஆப் நர்சிங் கல்லூரியின் விளக்கேற்றும் விழா கோல்டுவின்ஸ் பகுதியில் உள்ள ராமலட்சுமி அரங்கில் நடைபெற்றது. ராயல் கேர் மருத்துவமனை மற்றும் நர்சிங் கல்லூரியின் தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் கவுரவ அழைப்பாளராக திருச்சூர் ஜூப்ளி மிஷன் செவிலியர் கல்லூரியின் முதல்வர் ஏஞ்சலா ஞானதுரை கலந்து கொண்டு செவிலியர் பணியில் உள்ள பல்வேறு அர்ப்பணிப்புகள் குறித்து பேசினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் ராயல் கேர் செவிலியர் கல்லூரியின் முதல்வர் திலகவதி ராய் செவிலியர் உறுதிமொழியை முன்மொழிய மாணவ, மாணவிகள் விளக்கேற்றி உறுதி மொழி எடுத்தனர். விழா இறுதியில், துணை முதல்வர் சுமிதா நன்றியுரை வழங்கினார். விழாவில் மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.