கோயம்புத்தூர் மாரத்தான் குறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜெயராம் வரதராஜ் கூறுகையில்,
கோயம்புத்தூர் மாரத்தான்போட்டியின் 11 வது பதிப்பை நடத்துவதில் எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் முக்கிய ஸ்பான்ஸராக இருந்து உதவி புரிவதில் பெருமிதம் கொள்கிறோம். ஓட்டம், நடைபயிற்சி,உடற்தகுதி மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைத்து,புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த உதவுவதை இந்த மாரத்தான் நோக்கமாகக் கொண்டுள்ளது – 2023 பதிப்பு 1600+ எல்ஜி ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உட்பட18500+ ஓட்டப்பந்தய வீரர்களின் பங்கேற்க்க உள்ளனர். கடந்த தசாப்தத்தில்,எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் மற்றும் கோயம்புத்தூர் மாரத்தான் இடையேயான ஒத்துழைப்பு, கோயம்புத்தூரில் உடற்தகுதி குறித்த கண்ணோட்டத்தை முற்றிலுமாக மாற்றியமைத்தது மற்றும் ஒரு முக்கியமான உடல்நலப் பிரச்சினையான புற்றுநோயை எதிர்ப்பதில் கணிசமான முன்னேற்றம் அடைய உதவியது.கோயம்புத்தூர் மாரத்தான், புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், கோயம்புத்தூர் புற்றுநோய் அறக்கட்டளைக்கு (CCF) ஆதரவளிப்பதற்கும் ஒரு தளமாக கருதப்படுகிறது. பல ஆண்டுகளாக,இந்த நிகழ்வு பிராந்தியத்தில் புற்றுநோய் விழிப்புணர்வினை உண்டாக்கி வருகிறது. மராத்தானில் இருந்து கிடைக்கும் வருமானம்,கோயம்புத்தூர் புற்றுநோய் அறக்கட்டளைக்கு அதன் பல்வேறு செயல்பாடுகளான ஸ்கிரீனிங், கவுன்சிலிங் மற்றும் ஆதரவு குழுக்கள் போன்றவற்றை விரிவுபடுத்த உதவுகிறது, அத்தியாவசிய சேவைகள் அதிக எண்ணிக்கையிலான நபர்களுக்கு அணுகக் கிடைப்பதை உறுதி செய்கிறது. கூடுதலாக, அறுவை சிகிச்சைகள்,கீமோ தெரபி, கதிரியக்க சிகிச்சை, நோயறிதல் சோதனைகள், மருத்துவமனை கட்டணம் மற்றும் மறுவாழ்வு சேவைகளை உள்ளடக்கிய புற்றுநோய் நோயாளிகளுக்கு வழங்கப்படும் பண உதவியை அதிகரிக்கவும் இந்த வருமானம் உதவியாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.