• Tue. Dec 10th, 2024

100 சதவீதம் வாக்களிப்போம்: சிவகங்கை பேருந்து நிலையம் அருகே இராட்சத பலூனை பறக்கவிட்ட மாவட்ட தேர்தல் அலுவலர்

ByG.Suresh

Apr 12, 2024

100 சதவீதம் வாக்களிப்போம் என்ற இலக்கினை நோக்கி, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு, பேருந்து நிலையம் அருகே இராட்சத பலூனை மாவட்ட தேர்தல் அலுவலர் பறக்கவிட்டார்.

சிவகங்கை மாவட்டம், பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024ஐ முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற இலக்கினை நோக்கி, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு, வாக்காளர்கள் எளிதில் பார்த்து அறிந்து கொள்ளும் வகையில், விழிப்புணர்வு வாசகங்கள் ஒட்டப்பட்டுள்ள, விழிப்புணர்வு இராட்சத பலூன் இன்று வெள்ளிக்கிழமை காலை சுமார் 11 மணியளவில் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், அவர்களால் சிவகங்கை பேருந்து நிலையம் அருகில் பறக்க விடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் (சிவகங்கை) விஜயகுமார், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பிரபாவதி, மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் மங்கையர்திலகம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.