மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தேர்தல் சுற்றுப்பயணம் மேட்டுப்பாளையத்தில் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ள நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்துக்கு வருகை புரிந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வன பத்திரகாளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

சாமி தரிசனத்திற்கு பிறகு தேக்கம்பட்டி பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விவசாயிகள் நெசவாளர்கள் மற்றும் செங்கல் சூளை உற்பத்தியாளர்கள் அவர்களிடம் குறைகளை கேட்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இந்த நிகழ்வில் விவசாயிகள் அவிநாசி அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்டுள்ள குளங்களை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பாண்டியாறு புன்னம்புலா திட்டம் செயல்படுத்த வேண்டும், வனவிலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினர்.
அதேபோல் நெசவாளர்கள் தங்களுக்கு அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த மருத்துவ காப்பீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூட்டுறவு சங்கங்கள் நிதியின்மையால் நலிவடைந்து வருவதாகவும் உரிய கூலி வழங்கப்படுவதில்லை சிறுமுகை சாப்ட் சில்க் புவிசார் குறியீடு பெற்று தரவேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
செங்கல் சூளை உற்பத்தியாளர்கள் தடாகம் பகுதியில் செங்கல் உற்பத்தி முற்றிலும் முடங்கியதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பு,அதனை சார்ந்த தொழில்கள் முடக்கம்,லாரி தொழிலாளர்கள் வேலை இழப்பு போன்ற பல்வேறு குறைகளை எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் வைத்தனர்.
குறைகளை கேட்டு அறிந்த எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஆட்சி 2026 இல் மீண்டும் மலரும். அப்பொழுது விவசாயிகளின் பிரச்சனை குறைகளை முன்மாதிரியாக கருத்தில் கொண்டு செயல்படும் ஏற்கனவே பல்வேறு திட்டங்கள் அதிமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட விவசாய பணிகள் கிடப்பில் திமுக அரசு விட்டுள்ளது. அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் விடுபட்ட குளம் குட்டைகளை இணைக்க புதிய திட்டம் கட்டாயம் செயல்படுத்தப்படும்.
மேலும் நெசவாளர்கள் குறைகள் தீர்க்கப்படும், செங்கல் சூளை உற்பத்தியாளர்களின் கோரிக்கை சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.