• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இபிஎஸ் அரசியல் வாழ்க்கைக்கு திருச்சி மாநாடு முடிவுகட்டும் – வைத்தியலிங்கம் பேட்டி

ByA.Tamilselvan

Apr 19, 2023

திருச்சியில் நடைபெறவிருக்கும் மாநாட்டிற்கு பிறகு இபிஎஸ் தரப்பினர் எங்களை கண்டு சிதறி சின்னாபின்னம் ஆகி விடுவார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் பேட்டி
ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது பேசியதாவது, திருச்சியில் வரும் 24ம் தேதி ஓ.பி.எஸ் தலைமையில் நடைபெறவிருக்கும் மாநாட்டிற்கு இலட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் வருவார்கள். திருச்சியில் நடைபெறும் மாநாட்டிற்கு பிறகு இபிஎஸ் தரப்பினர் எங்களை கண்டு சிதறி சின்னாபின்னம் ஆகி விடுவார்கள். இந்த மாநாட்டிற்கு காவல்துறை ஒத்துழைப்பு வழங்க கோரி டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்து மனு அளித்துள்ளோம். தொண்டர்கள் தான் இந்த கட்சி என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த மாநாடு அமையும். எங்கள் மாநாடு அறிவித்த உடன் எடப்பாடி பழனிச்சாமி மதுரை மாநாட்டை அறிவித்துள்ளனர். திருச்சியில் நடைபெறவிருக்கும் மாநாட்டிற்கு பிறகு இபிஎஸ் தரப்பினர் எங்களை கண்டு சிதறி சின்னாபின்னம் ஆகி விடுவார்கள். சசிகலாவை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக கூறியிருந்ததை பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,உரிய நேரத்தில் இதற்கான பதில் தரப்படும் என்று கூறிய அவர், கூட்டணி கட்சி சார்பாகவும் யாரையும் இந்த மாநாட்டிற்கு அழைக்கவில்லை என்றும் தங்களுடைய செல்வாக்கை நிரூபிக்கும் மாநாடாக இது இருக்கும் என்று கூறினார்.