கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அஞ்சுகிராமம் பேரூராட்சி 7 ஆவது வார்டு காணிமடம் பகுதியில் அமைந்துள்ள மின் தகன மேடை அமைக்க ரூ1 கோடியே 15 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு திறந்து செயல்பட்டு வந்த நிலையில் தற்போது முறையாக செயல் படாத நிலை இருந்து வருகிறது.

இதனைத் கருத்தில் கொண்டு தொடர்ந்து மின் தகனமேடை தொடர்ந்து செயல்பட உரிய நடவடிக்கை வேண்டுமென அதிமுக அமைப்பு செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் அவர்கள் இன்று (30.10.2025) அஞ்சுகிராமம் பேரூராட்சி செயல் அலுவலரை சந்தித்து வலியுறுத்தினார். உடன் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் S.ஜெஸீம், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் மணிகண்டன் ஆகியோர் உள்ளனர்.













; ?>)
; ?>)
; ?>)