• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நீக்கப்பட்டாரா இடதுகை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன்?

Byகாயத்ரி

Nov 24, 2021

விஜய் ஹசாரே ஒருநாள் தொடர் கோப்பைக்கான 20 வீரர்கள் கொண்ட தமிழ்நாடு அணியில் இருந்து, இடதுகை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் நீக்கப்பட்டுள்ளார்.

காயத்தில் இருந்து மீண்ட தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். சையது முஷ்டாக் அலி கோப்பையை வென்ற கேப்டன் விஜய் சங்கர், விஜய் ஹசாரே கோப்பையிலும் தமிழக அணிக்கு கேப்டனாக நீட்டிக்கப்பட்டுள்ளார்.

விஜய் ஹசாரே டிராபியை இதுவரை தமிழ்நாடு, கர்நாடக அணிகள் 4 முறை வென்றுள்ளன, மும்பை அணியும் கடந்த முறை வென்று 4 முறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.காயம் காரணமாக தினேஷ் கார்த்திக்கும் சையது முஷ்டாக் அலி கோப்பையில் விளையாடவில்லை. இருவரும் காயத்திலிருந்து குணமடைந்ததால், விஜய் ஹசாரே கோப்பையில் தமிழக அணிக்கு திரும்பியுள்ளனர்.

ஆனால், காயம் காரணமாக நீண்ட நாட்கள் விளையாடாமல் இருந்து பிறகு மீண்டும் தமிழக அணியில் சையது முஷ்டாக் அலி கோப்பையில் விளையாடிய இடதுகை வேகப்பந்து வீச்சாளர் யார்க்கர் நடராஜன், விஜய் ஹசாரே கோப்பைக்கான தமிழக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சையத் முஷ்டாக் அலி கோப்பையில் நடராஜன் சரியாக பந்து வீசவில்லை என்ற காரணமா? அல்லது அவர் காயத்திலிருந்து முழுமையாக குணமடையவில்லையா என்பது தெரியவில்லை.இந்திய அணி வரலாற்றில் ஒரே தொடரில் நெட் பவுலராக சென்று மூன்று சர்வதேச வடிவங்களிலும் அறிமுகமாகி, ஆஸ்திரேலியாவில் கலக்கிய நடராஜனின் கிரிக்கெட் வாழ்க்கையில் இது நெருக்கடியான தருணம் தான்.