• Thu. Jan 15th, 2026
[smartslider3 slider="9"] Read Now

நாடாளுமன்ற தீவிரவாத தாக்குதலில் போரிட்டு வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தலைவர்கள் அஞ்சலி!

Byமதி

Dec 13, 2021

2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தை தீவிரவாதிகள் கைப்பற்ற முயன்றபோது நடைபெற்ற தாக்குதலின் போது வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படையினருக்கு குடியரசு தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், ‘2001- ஆம் ஆண்டு இதே நாளில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக போரிட்டு உயிர் தியாகம் செய்த வீரர்களை வணங்குகிறேன். அவர்களின் உன்னதமான தியாகத்திற்கு தேசம் என்றென்றும் நன்றியுடன் இருக்கும்’ என தனது இரங்கல் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், நாடாளுமன்ற தாக்குதலின் போது வீர மரணமடைந்த அனைத்து பாதுகாப்பு படை வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதாக தெரிவிதித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் நாடாளுமன்ற தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களுக்கு தமது டுவிட்டர் பக்கத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.