தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் முன்பாக தமிழ்நாடு பாண்டிச்சேரி கூட்டமைப்பு வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் முன்பாக வழக்கறிஞர் ராஜீவ் காந்தியை விடுதலை சிறுத்தை கட்சியினரால் தாக்கப்பட்ட நிகழ்வைக் கண்டித்து நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் தேனி திண்டுக்கல் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தின் போது கூட்டணி கட்சியினர் செய்யும் அடாவடித்தனத்திற்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படுவதை கண்டித்து கோஷம் எழுப்பியதோடு, வழக்கறிஞர் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோசமிட்டனர்.
மேலும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வழக்கறிஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.