• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நில உரிமையாளர் அடாவடி:ஹோட்டல் உரிமையாளர் கதறல்…

ByJeisriRam

Apr 13, 2024

காட்ரோடு பகுதியில் ஹோட்ட தொழில் செய்ய விடாமல் கடை வாசலில் டிப்பர் லாரிகளில் மண்ணைக் கொண்டு வந்து கொட்டி நில உரிமையாளர் அடாவடி செய்வதாக குற்றச்சாட்டு.

தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, காட்ரோடு பகுதியில் சையது முகமது என்பவர் தரை வாடகைக்கு இடத்தைப் பிடித்து கடந்த ஐந்து ஆண்டுகளாக 40 லட்சம் ரூபாய் செலவு செய்து மகாராஜா மகாராணி ஹோட்டல் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நில உரிமையாளர் ஜெயலட்சுமி இடத்தை விற்பனை செய்து விட்டதாக கூறி உடனடியாக கடையை காலி செய்ய வேண்டும் என கூறினார்.

அதற்கு கடை உரிமையாளர் உரிய கால அவகாசம் வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

அதற்கு நில உரிமையாளர் கால அவகாசம் கொடுக்க முடியாது உடனடியாக கடையை காலி செய்ய வேண்டும் என கூறி டிப்பர் லாரிகளில் மண்ணைக் கொண்டு வந்து கொட்டி கடையில் தொழில் செய்ய விடாமல் இடையூறு செய்யும் வகையில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையினர் நில உரிமையாளருக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக ஹோட்டல் உரிமையாளர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் தமிழக முதல்வர் தனிப்பிரிவிற்கும் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கபடவில்லை.

எனவே ஹோட்டல் தொழில் செய்யவிடாமல் கடை வாசலில் மண்ணை கொட்டி வைத்து இடையூறு செய்பவர்கள் நில உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹோட்டல் உரிமையாளர் சையது முகமது கோரிக்கை விடுத்துள்ளனர்.