• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஜெயங்கொண்டம் வழியாக கும்பகோணம் ரயில்வே திட்டம் பட்ஜெட்டில்  அறிவிக்கப்படும்.., பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறுதி..!

ByNeethi Mani

Nov 15, 2023

அரியலூர் மாவட்டம் முன்னேற்றம் அடைய ஜெயங்கொண்டம் வழியாக கும்பகோணம் ரயில்வே திட்டம் பட்ஜெட்டில்  அறிவிக்கப்படும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறுதி அளித்த சம்பவம் மாவட்ட மக்களை மகிழ்ச்சியில் ஆர்ப்படுத்தி உள்ளது.

ஜெயங்கொண்டத்தில்  பாஜக சார்பில் என் மண் என் மக்கள் பாத யாத்திரை  மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரை 14 ஆவது தொகுதியாக ஜெயங்கொண்டத்தில் நடைபெறுகிறது. மத்திய அரசு மாறியது போல்  தமிழகம் மாற வேண்டும். ஏனென்றால் இம்மண் சோழமன் சோழர்கள் தெற்காசியா முழுவதும் ஆண்டனர். அரியலூர் மாவட்டம் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் வளர்ச்சியில் இருந்தது ஆயிரம் வருடங்களுக்கு முன் ஆனால் இன்று வளர்ச்சி இல்லை. இன்று அரியலூர் மாவட்டத்தில் தண்ணீர் வசதி இல்லை. இதனால் விவசாயம் முழுவதும் பாதிக்கப்பட்டு விவசாயிகள் தமிழகம் முழுவதும் கூலி வேலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இம் மாவட்ட இளைஞர்கள் அனைவரும் வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்றுள்ளனர். அரியலூர் மாவட்ட வளர்ச்சியே தமிழகத்தின் வளர்ச்சி. மது கொலை கொள்ளை அதிகரித்துள்ளது. இளைஞர்கள் விவசாயிகள் சிறு குறு தொழிலாளர்களின் வளர்ச்சி தான் இந்த யாத்திரை. திமுக  பொறுப்பேற்று 30 மாதத்தில் தமிழகம் வளர்ச்சி குன்றி குறைந்து உள்ளது.  திமுகவின் சாதனை தீபாவளியில் டாஸ்மாக் விற்பனை அதிகரித்து உள்ளதே. இதை மாற்ற புதிய ஆட்சி தேவை மோடியை போல் தமிழகத்தில் புதிய ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் பிஜேபியை நம்புகின்றனர். அரியலூர் மாவட்ட இளைஞர்களான வினோத் மற்றும் ராசு ஆகியோர் சைக்கிளில் லடாக் சென்று மக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் நாற்றுப்பற்றை உருவாக்கி இராணுவத்தில் சேர விழிப்புணர்வை ஏற்படுத்தினர். திமுகவின் குடும்பத்தில் நாட்டுப்பற்று இருக்கிறதா. ஸ்டாலினை பொறுத்தவரை மகன் மருமகனுக்கான ஆட்சி இது. முதல்வர் சாலினை பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள குழந்தைகள் பற்றி கவலை இல்லை ஏனென்றால் பள்ளிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேவை கல்வி முழுவதும் குழந்தைகளுக்கு கிடைக்கவில்லை. 2014ல் மோடி ஆட்சி தொடங்கிய 9 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளை அமைத்து மருத்துவ மாணவர்களை இரு மடங்காக உயர்த்தி உள்ளார்.பள்ளி படிக்கும் குழந்தைகளை அழைத்துச் சென்று என்னவென்று தெரியாமல் குழந்தைகளை ஏமாற்றி கையெழுத்து வாங்குகின்றனர். வீட்டை ஏன் எதிர்க்கிறார்கள் என்றால் திமுகவினர் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில், சீட்டை விற்று சம்பாதிக்க முடியவில்லை அதனால் தான்.25 வருடங்களுக்கு முன் ஜெயங்கொண்டத்தில் அனல் மேலும் தொடங்குவதாக கூறி 8373 ஏக்கர் நிலங்களை வெறும் 35 ஆயிரம் எழுப்பிடுவதினர். பாதிக்கப்பட்ட விவசாயிகள் நீதிமன்றங்களை நாடி 2021 இல் நீதிமன்றம் ஏற்பிட்டை 42 மடங்கு உயர்த்தி சுமார் 15 லட்சம் ஏக்கருக்கு வழங்க உத்தரவிட்டது. அதை தமிழக ஆட்சியாளர்கள் 8 லட்சம்மாக குறைத்தனர். விவசாயிகள் ஏற்காததால் நிலங்களை திருப்பி வழங்கி உள்ளனர் கடந்த 25 வருடங்களாக விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர் அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படவில்லை. 24 இல் மீண்டும் மோடி வரவேண்டிய காரணம். 2014க்கு முன் அனைத்து பத்திரிகை, தொலைக்காட்சி அனைத்திலும் வெளிவந்தது ஊழல், ஊழல், ஊழல். அதற்குக் காரணம் ஆட்சியில் பங்கில் இருந்த திமுக செய்த பல லட்சம் கோடி ஊழல்களே. காங்கிரஸ் திமுக ஆட்சி களில் 12 லட்சம் கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளது. 9 ஆண்டு முடிந்து பத்தாவது ஆண்டில் தொடங்குகிறது  எந்த ஊழலும் நடைபெறவில்லை என்பது அனைவருக்குமே தெரியும். இப்போதைய திமுக அமைச்சர்கள் 33 பேரில் 11 பேர் ஊழல் அமைச்சர்கள் புகார்கள் வழக்குகள் உள்ளன. திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் 511 இல் 20 மட்டுமே முழுவதுமாக நிறைவேற்றி உள்ளனர். ஆனால் ஸ்டாலின் 99 சதவீத வாக்குகள் நிறைவேற்றியதாக பொய் கூறுகிறார்.30 மாதத்தில் 300 மடங்கு கடன் தமிழகத்தில் அதிகரித்துள்ளது ஒரு குடும்பத்தின் மீது மூன்று லட்சத்து 52 ஆயிரம் கடன் உள்ளது. தமிழக அமைச்சர்கள் மது இல்லை என்றால் ஆட்சி நடத்த முடியாது என்று பகிரமாக கூறுகின்றனர். திமுக அமைச்சர்கள் மது ஆலைகளில் இருந்து விற்பதற்காகத்தான் டாஸ்மாக் உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் மத்திய அரசாணை மோடியின் ஆட்சியில். 26 ஆயிரத்து 571 வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஜெல் ஜீவன் குடிநீர் திட்டத்தில் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 129 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 699 கழிவறைகள். உஜ்வாலா திட்டத்தில் 61,42 பேர்களுக்கு  கேஸ் சிலிண்டர் இணைப்பு. மருத்துவ காப்பீட்டை 81 ஆயிரத்து 965 பேர்   பயன்படுத்தி உள்ளனர். முத்ரா திட்டத்தில் சிறுகுறு விவசாயிகள் ஒரு லட்சத்து 512 கோடி பணம் பெற்றுள்ளனர். கடந்த 70 வருடங்களாக அரியலூர் மாவட்டம் பின்தங்கி உள்ளது மாவட்டத்தை முன்னேற்ற பிஜேபி யால் மட்டுமே முடியும் என்று நம்புகிறீர்கள் நம்பிக்கையை நிறைவேற்றுவோம். மூன்றாவது முறையாக 2024 இல் மோடி ஆட்சி அமைப்பார் 2026 இல் தமிழகத்தில் பிஜேபி ஆட்சி அமைக்கும். அரியலூர் மாவட்டத்தின் நூற்றாண்டு கனவான விருதாச்சலத்தில் இருந்து ஜெயங்கொண்டம் வழியாக கும்பகோணம் நீடாமங்கலம் வரை புதிய ரயில் பாதை திட்டத்தை 2015 ஆம் ஆண்டு பிஜேபி ஆட்சி அமைந்தது முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக பாஜக நிச்சயமாக அழுத்தம் கொடுத்து வரும் பட்ஜெட்டில் நிச்சயமாக ஜெயங்கொண்டம் வழியான புதிய ரயில் திட்டம் நிறைவேற்றப்படும். தமிழக மக்கள் தமிழகத்தை  மாற்ற யோசிக்க வேண்டும் மாற்றம் வேண்டும் மோடி ஆட்சி நான் 400, 420, 440 வருமா என்று தான் யோசித்து வருகிறோம். எனவே மூடி ஆட்சி உறுதி அவருக்கு தோள் கொடுக்க சிதம்பரம் தொகுதியை மட்டுமல்லாமல் தமிழக முழுவதும் தமிழக மக்கள் வாக்களிக வேண்டும். இதுதான் வரும் சட்டமன்றத்திற்கு முன் மாற்றத்திற்கான வழி. சமூக நீதிக்கு எதிரானது திமுக,அவர்களுடன் கூட்டணி வைத்துள்ள விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இந்த தொகுதியில் எம். பி. ஆனால் தொகுதி பக்கமே அவரை யாரும் பார்த்ததில்லை. திருமாவளவன் சமூக நீதி பற்றி பேசுகிறார் திமுக கூட்டணியில் இருந்து கொண்டு இது வேடிக்கையாக உள்ளது. அரியலூர் மாவட்டம் குறிப்பாக ஜெயங்கொண்டம் வளர்ச்சி தேவை பிஜேபியால் மட்டுமே முடியும்.