• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நாகர்கோயில் கோட்டார் ஸ்ரீஆறுமுக விநாயகர் திருக்கோயிலில் கும்பாபிஷேகம்

மாண்புமிகு தமிழக முதல்வர் நல்லாட்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு வழிகாட்டுதலின்படி, சட்டமன்ற அறிவிப்பு 2022-23 ல் 100 திருக்கோயில் திருப்பணிகளில், நாகர்கோயில் கோட்டார் ஸ்ரீ ஆறுமுக விநாயகர் திருக்கோயிலில், திருக்கோயில் நிதி ரூ. 15.90 லட்சமும்,  உபயதாரர் மூலம் ரூ.10 லட்சம் செலவில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்தன. பணிகள் முடிந்து இன்று காலை 10.00 மணி அளவில் குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாக அறங்காவலர் குழுத்தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில், இணை ஆணையர் பழனிக்குமார், மராமத்து பொறியாளர் ராஜ்குமார், ஸ்ரீகாரியம் ரமேஷ், திமுக அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாநில துணை செயலாளர் சிவராஜன், பாஜகவின் மாநகராட்சி உறுப்பினர் முத்துராமன் மற்றும் திமுகவின் வட்ட செயலாளர் முருகன் வட்ட பிரதிநிதிகள் பேச்சி முத்து, நடேசன், அஜித் ஆகியோர் கலந்து கொண்டார்.