• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

குமரி சுசீந்திரம் தாணுமாலையசாமி கோயில் மார்கழி திருவிழா தேரோட்டம்

குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற இந்து கோவில்களில் ஒன்று சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலின் தேரோட்டம் இன்று நடைபெற்றது.

குமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், அவரது தாயார் செந்தமிழ் செல்வி, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ்குமரி மாவட்டம் அறங்காவலர்கள் குழு தலைவர் பிரபா, ஜி.ராமகிருஷ்ணன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், ஜோதி குமார், சுந்தரி, ஓ.எஸ். துளசீதரன்நாயர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று தேரின் திருவடம் பிடித்து தேர் ஓட்டத்தை தொடங்கி வைத்தனர்.

பெரிய தேர், சாமி தேர், அம்மன் தேர் என மூன்று தேர்கள் சமகாலத்தில் தேரோடும் வீதியில் வரிசையாக ஆடி,ஆடி செல்வதை காணமுடியும். இதில் அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்து செல்வது. சுசீந்திரம் தேர் ஓட்டங்களில் ஒரு ஒற்றை அதிசயம்.

இந்திய சுதந்திர போராட்டம் காலத்தில் நடைபெற்ற தேரோட்டத்தின் போது அன்றைய தேச பக்தர்களால் காங்கிரஸ் கட்சியின் கொடியை பெரிய தேரீல் கட்டிவிட்டார்கள். தேர் நிலைக்கு வரும் நேரத்தில் அன்றைய பிரிட்டிஷ் காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியதில் பலர் இறந்ததை இன்றும் ஒரு முதியவர் நினைவு கூர்ந்தார்.

சுசீந்திரம் தேரோட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகளின் வயல்களில் நல்ல விளைச்சலை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லும் நாளாகவும், விவசாயிகளின் பங்களிப்புக்கு ஒரு காரணம் என்பது அய்தீகம்.

புதிதாக திருமணம் செய்து கொண்ட கணவன்,மனைவி ஒன்றாக தேரோட்டத்தில் பங்கு கொண்டு திருத்தேரை தரிசிப்பது புது மண மக்களின் வாழ்க்கை பயணம் நலமாக இருக்கும் என்ற நம்பிக்கை இன்றும் தொடர்கிறது.

சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய சுவாமி கோயில் தேர் செய்யப்பட்ட இடம் அன்று முதல் தேரூர் என்ற அடையாள பெயருடன் சொல் வழக்கில் தொடர்கிறது.

இன்றைய தேரோட்டத்தில் சுசீந்திரம் நண்பர்கள் குழு ஒரே விதமான வண்ணம் சீர் உடையில் கலந்து கொண்ட, பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த நண்பர்கள் குழுவினர்