• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

குமரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தை கடற்கரையோர வியாபாரிகள் முற்றுகை

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் உள்ள வியாபாரிகள். தங்கள் கடைகளை ஏலம் விடுவதை தடுக்க கோரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தை கடற்கரையோர வியாபாரிகள் முற்றுகையிட்டனர்
கன்னியாகுமரி கடற்கரை சாலை,திருவேணி சங்கமம் பகுதிகளில் உள்ள திறந்த வெளி பகுதிகள் எங்கும் சுற்றுலா பயணிகள் நடமாட முடியாத வண்ணம் கடை பரப்பி இருப்பதால்.சுற்றுலா பயணிகள் அமைதியான முறையில் கடற்கரை பகுதிகளில் இருக்க முடியாத சூழ்நிலை காரணமாகவும் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் கடற்கரை சாலையை ஒட்டி திறந்த நிலப்பரப்பில். குறிப்பாக காந்தி மண்டபத்தின் எதிரே இருந்த பகுதி முழுவதும்.எவ்வித அனுமதியும் இன்றி வைத்திருந்த கடைகள் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக இருந்த நிலையில்.168 தள்ளுவண்டி வியாபாரிகளுக்கும் மாற்று இடம் கொடுத்து.ஆண்டுக்குரூ.40, ஆயிரம் என வாடகை. இதனை12_மாதங்களுக்கு பிரித்து வாடகை கட்டும் ஒப்பந்தத்தில் கடைகள் கொடுக்கப்பட்டது.


கொரோனா காலத்தில் அரசே முழு அடைப்பை கட்டமாக்கிய காலத்தில் வருவாய் இழப்பு ஏற்பட்ட காலத்தில் கடை வாடகையை.இந்தவியாபாரிகள்முழுமையாக செலுத்தவே இல்லை. நகர் புற உள்ளாட்சி தேர்தலில்.கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சியின்.மொத்தமுள்ள 18_வார்டுகளில்.16_வார்டுகளை தி மு க. கூட்டணி வெற்றி பெற்று அதிகாரத்தை கை பற்றியது.அ தி மு க,பாஜக தலா ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.
தமிழகத்தில் தி மு க ஆட்சி அதிகாரத்தை பெற்ற நிலையில் உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வெற்றி கொண்டு அதிகாரத்தை கை பற்றிதை அடுத்து.நிர்வாக வசதிகளுக்கா, பேரூராட்சி பகுதி கடைகளுக்கு வரி உயர்வு சில இடங்களில் அரசு நிலத்தின் கடைகளை ஏலம் இட்டு வாடகை நிர்ணயம் செய்து வருவதின் அடிப்படையில்.கன்னியாகுமரி, கடற்கரை பகுதியில் உள்ள கடைகளை ஏலம் விட்டு வாடகை நியமனம் செய்ய இருக்கும் நிலையில்.
கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் உள்ள வியாபாரிகள். தங்கள் கடைகளை ஏலம் விடாது. சற்றே வாடகை உயர்த்தி தற்போது இருப்பவர்களுக்கே தொடர்ந்து கொடுக்க வேண்டும் என இன்று (ஏப்ரல்_17)ம் நாள் காலை முதல் சிறப்புநிலை பேரூராட்சி அலுவலகம் முற்றத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.இந்த போராட்டத்தில்.பாஜக,அ தி மு க., வார்டு உறுப்பினர்கள் இருவரும் போராட்டாக்காரர்களுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி. ஸ்டீபன், மற்றும் நிர்வாக அதிகாரி,வார்ட் உறுப்பினர்கள்.போராட்டக்காரர்களின் பிரதிநிதிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி இன்னும் ஒரு வார கால அவகாசத்தில்.சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளுடன் பேசி முடிவு எடுப்பதாக தெரிவித்தனர்.இதற்கு உடன் பட்டு முற்றுகை போராட்டம் நடத்திய ஆண்,பெண் பேராட்டகரார்கள் கலைந்து சென்றனர்.
போராட்டம் காரணமாக பேரூராட்சி வளாகத்தில் காவலர் கண் காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.