• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

குமரி மாவட்டம் அண்மையில் பொது மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்ட நிகழ்வு

நாகர்கோவிலில் சட்டமன்ற தொகுதியிலிருந்து அ தி மு க சார்பில் வெற்றி பெற்ற, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் மீது, நாகர்கோவிலை சேர்ந்த 15_
வயது சிறுமியை கடந்த 2020_ம் ஆண்டு வீட்டில் இருந்து திடிரென மாயமானர், இது குறித்து சிறுமியின் தாய் மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் அடிப்படையில் நாஞ்சில் முருகேசன் உட்பட 5 பேர் மீது பாலியல் வழக்கில் போஸ்கோ வழக்கு பதிவிட்ட நிலையில். நாஞ்சில் முருகேசன் தலைமறைவானார். காவல் துறை மூன்று நாட்கள் தேடுதலுக்கு பின், தூத்துக்குடி மாவட்டம் உவரி பகுதியில் ஒரு பானை மர காட்டில் மறைந்திருந்த போது. காவல்துறையினர் குறிபிட்ட இடத்திற்கு சென்று நாஞ்சில் முருகேசனை கைது செய்து கன்னியாகுமரி காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

காவல் துறை விசாரணையில் சிறுமி வெளிப்படுத்திய அதிர்ச்சி தகவல் வெளியானது. இந்த பலாத்கார வழக்கில் நாஞ்சில் முருகேசன் உட்பட 5_பேர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது, பின்னர் நாஞ்சில் முருகேசன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன் நேற்று முன்தினம் தீர்ப்பு கூறினார். காவல்துறை குற்றத்தை நிறுபிக்கும் சான்றுகளை அளிக்கவில்லை,இதனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றம் நிறுபிக்கப்படாததால், நாஞ்சில் முருகேசன் உட்பட குற்றம் சாட்டப்பட்ட ஏனைய 5_பேர் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.