குமரி மாவட்டத்தில் 15.05.2024 முதல் 17.05.2024 ஆகிய நாட்களுக்கு மிதமான மழையும். 18.05.2024 மற்றும் 19.05.2024 தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையினை கருத்தில் கொண்டு உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்படாத வண்ணம், ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் தகுந்த முன் எச்சரிக்கையுடன் பாதுகாப்புடன் இருக்கவும். மின்சாதனங்களை கவனமுடன் கையாளவும். மேலும் மழை நேரங்களில் மரங்கள். மின்கம்பங்கள். நீர்நிலைகள் அருகில் செல்ல வேண்டாம் எனவும், மழைக்காலங்களில் நீர்நிலைகளில் நீரின் வரத்து அதிகமாக வா வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் நீர்நிலைகளில் குளிக்க செல்லவேண்டாம் எனவும். கடலில் சீற்றம் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதால் கடற்கரை பகுதிக்கு செல்லவேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகத்தால் கேட்டுக் கொள்ளப்படுவதாக குமரி ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.