• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

எம்.எல்.ஏ அய்யப்பனுக்கு பாராட்டுகள்

ByP.Thangapandi

Oct 23, 2024

உசிலம்பட்டி அருகே தனது பிறந்தநாளை முன்னிட்டு, தொழு நோயாளிகளுக்கு புத்தாடை, இனிப்பு மற்றும் உணவு பொருட்களை வழங்கி கொண்டாடிய உசிலம்பட்டி எம்.எல்.ஏ அய்யப்பனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று தொழு நோயாளிகளுக்கு புனர்வாழ்வு சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட 100க்கும் அதிகமான தொழு நோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் மாதாந்திர பரிசோதனைகள் நடைபெற்றன.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், இன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு தொழு நோயாளிகள் அனைவருக்கும், புத்தாடை, இனிப்பு மற்றும் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கி கொண்டாடினார்.

மேலும் கடந்த காலங்களில் தனது பிறந்த நாளை பெரிய அளவில் கொண்டாடியது இல்லை என்றும் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு சென்று வந்த நான் இந்த ஆண்டு தொழு நோயாளிகளுக்கு உதவிகளை வழங்கி கொண்டாடியது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் தங்களும் நோய் நீங்கி நலமுடன் வாழ இறைவறை பிராத்திக்கிறேன் என நெகிழ்ச்சியுடன் பேசினார்.

தொழு நோயாளிகளுக்கு புத்தாடை மற்றும் உணவு பொருட்களை வழங்கி தனது பிறந்த நாளை கொண்டாடிய உசிலம்பட்டி எம்.எல்.ஏ.விற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.