• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

KRG ஸ்டுடியோஸ் தொலைநோக்கு இயக்குனர் அஞ்சலி மேனன் ஒன்றிணையும் முன்னோடி படைப்பு

Byஜெ.துரை

Feb 21, 2024

கன்னட திரையுலகில் தடம் பதித்து – ஆற்றல் மிக்க திரைப்பட தயாரிப்பு, விநியோகஸ்த நிறுவனமாக விளங்கும் KRG ஸ்டுடியோஸ், தொலைநோக்கு பார்வை கொண்ட இயக்குனர் அஞ்சலி மேனனுடன் இணைந்து தனது முதல் தமிழ் திரைப்பட தயாரிப்பை அறிவித்துள்ளது.

தனித்துவமான கதைசொல்லும் உத்தியை கையாளும் இயக்குநர் அஞ்சலி மேனனின் முந்தைய படைப்புகளான ‘பெங்களூர் டேஸ்’, ‘மஞ்சாடிக்குரு’, ‘உஸ்தாத் ஹோட்டல்’, ‘கூடே’ ஆகிய திரைப்படங்களும், சமீபத்தில் வெளியான ‘ஒண்டர் வுமன்’ ஆகிய திரைப்படமும் அனைத்து தரப்பினராலும் பெரும் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

தனது படைப்புகளில் முத்திரை பதிக்கும் அஞ்சலி மேனன் இம்முறை KRG ஸ்டுடியோஸ் உடன் இனைகிறார், திரைப்பட தயாரிப்பு, விநியோகஸ்த நிறுவனமான KRG முதல் முறையாக தமிழில் திரைப்பட தயாரிப்பில் அடியெடுத்து வைக்கும் இந்த தருணத்தில், அஞ்சலி மேனனுடன் இணைந்து தனது முதல் படைப்பை தமிழில் எடுப்பதில் உவகை கொள்கிறது,

கன்னட திரைத்துறையிலும் அதற்கு அப்பாலும் கதை சொல்லுதலில் உள்ள இடைவெளிகளைக் குறைக்க கவனம் செலுத்தும் இவ்வேளையில், KRG நிறுவனம், இயக்குனர் அஞ்சலி மேனனின் நேர்த்தியான கதை சொல்லுதலின் மூலம் கதை சொல்லும் மரபை சீரமைக்க உள்ளது.

2017ல் KRG தனது திரைப்பட விநியோக வணிகத்தை தொடங்கி இதுவரை 100ற்கும் மேற்பட்ட திரைப்படங்களை வெற்றிகரமாக விநியோகித்து வருகிறது.

மேலும் KRG நிறுவனம் தன்னை ஒரு திரைப்படத்தின் கருவாக்கம் முதல் உருவாக்கம் வரை 2020 முழு நேர தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துக்கொள்கிறது. KRG தனது ஆரம்ப கால வெற்றியை ரோஹித் படக்கி இயக்கத்தில் தனஞ்ஜெய் நடித்து Amazon Primeல் வெளியான “ரத்னன் பிரபன்ஜா” திரைப்படத்தின் மூலம் சூடிக்கொண்டது குறிப்பிடத்தக்கது… அந்த ஆரவாரமான வெற்றிக்கு பிறகு KRG தனது பயணத்தை 2023 மார்ச் மாதத்தில் வெளியான “குருதேவ் ஹொய்சாலா” மூலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அஞ்சலி மேனன் மற்றும் வருங்கால இயக்குனர்களுடன் கை கோர்க்க இருக்கும் KRG, தனது நெறியை அனைத்து வகை படங்களின் கதைகளிலும் ஆழ்ந்த உள்ளடக்கம் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்பதை பிரதானமாக கருதுகிறது. தனது பார்வையை நான்கு தென்னிந்திய மொழிகளிலும் விரிவாக்கம் செய்ய எத்தனிக்கும் KRG, வளர்ந்து வரும் திறமைசாலிகளை ஊக்குவிப்பதுடன், திரையுலகில் தடம் பதித்த கதை சொல்லிகளின் ஒத்துழைப்புடன் தயாரிப்பில் ஈடுபட விருப்பம் கொண்டுள்ளது. KRG தனது ஒரே இலக்காக கதை சொல்லும் கலையில் கவனம் செலுத்துகிறது.

KRG உடன் இனைவது பற்றி அஞ்சலி மேனன் கூறுகையில் “KRG ஸ்டுடியோஸ் உடன் இணைய இருக்கும் இவ்வேளையில் மக்களை ஈர்க்க கூடிய வகையில் நமது கலாச்சாரத்தை மையமாக வைத்து உலகத்தரத்தில் படங்கள் எடுப்பதிலும், இந்தியாவில் உள்ள பல்வேறு மொழி, கதை நிலப்பரப்புக்களுக்கு அப்பால் பார்வையாளைகளை ஒன்றிணைத்து அவர்கள் மறக்கவே முடியாத, சிந்தனையைத் தூண்டுகிற அதே சமயம் பொழுது போக்கு நிறைந்த திரைப்பட பயணங்களுக்கு கூட்டி செல்ல ஆர்வமாக உள்ளோம்” என்றார்

KRG-ன் தயாரிப்பாளரும் இணை நிறுவனருமான கார்த்திக் கவுடா கூறுகையில்:

“அஞ்சலி மேனனுடனான எங்கள் ஒத்துழைப்பு KRG க்கு ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது. கதை சொல்லும் நேர்த்தியே பிரதானம் என்றாலும், நாங்கள் சினிமா தன்னுள் வைத்திருக்கும் மாயையை நம்புகிறோம்.

இந்தக் கூட்டாண்மையானது பலதரப்பட்ட பகுதிகளில் சிதறி கிடக்கும் பார்வையாளர்கள் மற்றும் இந்திய மொழிகளில் உள்ள கதைகளை எதிரொலித்து, ஒரு சேர வடிவமைப்பதில் எங்களின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டும் என நம்புவதாகவும், இந்த பயணம், நானும் எனது அன்பு நண்பரும், அனுபவமிக்க பொழுதுபோக்கு நிர்வாகியுமான விஜய் சுப்ரமணியமும் விவாதிக்கையில் கதை/கருத்து அடிப்படையிலான கதைகள் ஒரு நல்ல திரைப்படமாக உருவெடுத்தால் அது பார்வையாளர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் அளவில்லாதது என உணர்கையில் தொடங்கியது. அவரும் எங்கள் திறனைக் கண்டு எங்களுடன் ஒரு வழிகாட்டியாகவும், இணை தயாரிப்பாளராகவும் ஒத்துழைக்க முடிவு செய்ததற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஒத்த எண்ணம் கொண்ட நண்பர்களின் ஒத்தாசையுடன் துல்சியாவை சேர்ந்த சைதன்ய ஹெக்டே போன்றோருடன் கூட்டாண்மைகளை உருவாக்கி, பார்வையாளர்களுக்கு எங்களின் சேவையை சிறப்பானதாகவும் எல்லாவற்றிற்கும் மேலாகவும் வழங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

இந்த ஒத்துழைப்பு சினிமா நிலப்பரப்புகளை மறுவரையறை செய்வது மட்டுமல்லாமல் உள்ளூர் மற்றும் தேசியத் துறைகளில் கதைசொல்லும் உத்தியின் பரிணாம வளர்ச்சிக்கும் பங்களி.