நீலகிரி மாவட்டம் கோடநாடு பங்களாவில் அரங்கேறிய கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முக்கிய குற்றவாளியான சயானிடம் இரு வாரங்களுக்கு முன் விசாரணை நடைபெற்ற நிலையில் இந்த வழக்கின் 9வது குற்றவாளியான மனோஜ்சாமி என்பவரிடம் விசாரணை நடத்துவதற்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
இதனை தொடர்ந்து பி.ஆர்.எஸ் வளாகத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் மனோஜ்சாமி நேரில் ஆஜரானார். அவரிடம் ஏடிஎஸ்பி முருகசாமி விசாரணை மேற்கொள்கிறார்.