• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கே.கே.ஆர்.அகாடமி புதிய பயிற்சி நிலையம்..,

கே.கே.ஆர்.அகாடமி இயக்குநர் சிகான் ஹைச்.ராஜ் கடந்த பல்லாண்டுகளாக சிறுவர், சிறுமிகளுக்கு. காராத்தே, சிலம்பம்,போன்ற தற்காப்பு கலைகளுக்கு பயிற்சி கொடுத்து வருவதோடு,

குமரி மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் காராத்தே, சிலம்பம் பயிற்சி பெற்ற சிறுவர், சிறுமிகளுக்கு இடையே போட்டிகள் நடத்தி அவர்களுக்கு இந்த தற்காப்பு கலைகளில் உள்ள ஆர்வத்தை ஊக்கப்படுத்த பல்வேறு பரிசுகளுடன், சான்றிதழ் வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

கன்னியாகுமரியை அடுத்த மகாதானபரத்தில் புதிதாக தற்காப்பு கலைகளுக்கு,பரத நாட்டியத்திற்கும் பள்ளி திறக்கப்பட்டுள்ளது.

திறப்பு விழா சிறப்பாக. பரதத்தில் ஏற்கனவே பல்வேறு இடங்களில் பயிற்சி பெற்று வரும் சிறுமிகள் 50_க்கும் அதிகமானவர்களின் பரதத்தில் போட்டி நடத்தி பரிசுகளும், சான்றிதழ் வழங்கினார். கே.கே.ஆர் அகடாமி சார்பில், புதிய பயிற்சி கூடத்தை, குமரி மாவட்ட ரோட்டரி ஆளுநர் மீரான்கான் சலீம் திறந்து வைத்தார். மாவட்ட ரோட்டரி பொருளாளர் சரவண சுப்பையா தலைமை வகித்தார்.

மாவட்ட ரோட்டரி செயலாளர் பிரபாகரன், நாகர்கோவில் டவுண் ரோட்டரி தலைவர் லாரன்ஸ், செயலாளர் முகமது ரிஸ்வான், மாவட்ட ரோட்டரி துணை ஆளுநர் ராபர்ட் சிபுதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்வில் ஆர்.சரஸ்வதி சிகான் ஹெச்.ராஜ், வினிஷாமனிஷ் குத்து விளக்கேற்றினர். கே.கே.ஆர். அகாடமி இயக்குநர் சிகான் ஹெச்.ராஜ் வரவேற்றார்.

ஓய்வுபெற்ற ஆசிரியர் எஸ்.ஆர்.கே.குமார் வழங்கினார். விழாவின் நிறைவாக தேசிய கீதம் பாடினார்கள்.