• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மாமன்னர் சாலிவாகணன் சிலை அமைக்க வேண்டும்

ByA.Tamilselvan

May 8, 2022

குலாலர் இனத்தைச் சார்ந்த மாமன்னர் சாலிவாகணன் சிலை அமைத்து, அரசு விழாவாக கொண்டாட குலாலர் சாலிவாகணன் மக்கள் இயக்கம் முதல்வருக்கு கோரிக்கை.
மதுரையில் குலாலர் சாலிவாகனன் மக்கள் இயக்கம் சார்பில், மாநில கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. தலைமை ஒருங்கிணைப்பாளர் அமல்ராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் ஓராண்டு நிறைவு பெற்று சாதனை படைத்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் சிறந்த ஆட்சிக்கு குலாலர் சாலிவாகனன் மக்கள் இயக்கம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கும் தீர்மானமும், 56 தேசங்களை ஆண்ட குலாலர் இனத்தைச் சார்ந்த மாமன்னர் சாலிவாகணன் சிலை அமைத்து அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள கிராம கோயிலில் குலாலர் இனத்தைச் சேர்ந்தவர்கள் பூசாரிகளாக உள்ளனர். சொந்தச் செலவில் தினசரி பூஜை செய்து வருகிறார்கள் பூஜை பொருள்கள் வாங்க நாளொன்றுக்கு 500 ரூபாய் அரசு சார்பில் வழங்க வேண்டும், மண்பாண்ட தொழிலாளர்கள் சுவாமி சிலைகள், பொம்மைகள் செய்யும் தொழிலாளருக்கு நல வாரியம் அமைத்திட வேண்டும், தற்போது நல வாரியத்தில் காலியாக உள்ள பொறுப்பிற்கு குலாலர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை வாரிய தலைவராக நியமித்திட வேண்டும்.
மழைக்கால நிவாரணமாக தற்போது கொடுக்கப்பட்டு வரும் தொகை 5 ஆயிரத்தை பத்தாயிரம் ஆக வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் தலைமை ஒருங்கிணைப்பாளர் அமல்ராஜ் செய்தியாளருடன் கூறியதாவது தமிழகத்தில் குலாலர் சமுதாயம் மண்பானைகள் செய்வதோடு நாட்டு செங்கல் தயாரிக்கும் பணியிலும் ஈடுபடுகிறார்கள் குறிப்பாக மலை கிராமங்கள் உள்ளவர்கள் மண் எடுப்பதில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளனர். கடந்த ஆட்சி காலத்தில் குலாலர்கள் மண்ணெடுக்க தடை இல்லை என உத்தரவு பிறப்பித்து முறையான அரசாணை இல்லாததால் மண்ணடுக்க முடியவில்லை எனவே தற்போது தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் அறிவித்துள்ள உத்தரவை அரசாணையாக பிறப்பித்து வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்.
வனத்துறையினர் 10 கிலோமீட்டர் அப்பால் மண் எடுக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர் அரசு தரப்பில் ஒரு கிலோமீட்டருக்கு மேல் மண் எடுக்கலாம் என தெரிவிக்கின்றனர் 10 கிலோமீட்டர் என்பதை ஒரு கிலோ மீட்டராக குறைத்து அரசாணை வெளியிட்டால் மட்டுமே எங்களது குலாலர் சமூகத்தினர் பயன்பெறுவர். இந்த முரண்பாடை அரசாணையாக தெளிவுபடுத்த வேண்டும். அதுபோல உள் ஒதுக்கீட்டில் எங்களுக்கு 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம், என்றார்.