• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ரஷ்ய தினத்தில் ரஷ்ய அதிபருக்கு வாழத்து சொன்ன கிம் ஜாங் உன்….

Byகாயத்ரி

Jun 13, 2022

ரஷ்ய தினத்தையொட்டி அந்நாட்டு அதிபர் புதினுக்கு, வட கொரிய அதிபர் கிம்ஜாங் உன் சிறப்பு வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியிருக்கிறார். ரஷ்ய தினம் கடந்த 1992 முதல் வருடந்தோறும் ஜூன் 12 அன்று கொண்டாடப்படுகிறது. இதில் ஜூன் 12, 1990 அன்று ரஷ்ய சோவியத் கூட்டமைப்பு சோசலிஸ்ட் குடியரசின் (ஆர் எஸ் எப் எஸ் ஆர்), மாநில இறையாண்மை பிரகடனத்தை ஏற்றுக் கொண்டதை இந்நாள் நினைவுபடுத்துகிறது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள தாக்குதல் 109 நாட்களை எட்டியுள்ள சூழ்நிலையில், ரஷ்ய மக்கள் தங்கள் இலக்குகளை நிறைவேற்றுவதில் பெரும் வெற்றியை அடைந்துள்ளனர் என வட கொரிய அதிபர் கிம்ஜாங் உன் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தி நிறுவனம் கூறியதாவது, வடகொரிய தலைவர் ரஷ்யாவின் மக்களுக்கான அரசாங்கம் மற்றும் ரஷ்ய குடிமக்களுக்கு அதன் தேசிய தினத்தில் அன்பான வாழ்த்துக்களை கூறினார்” என செய்தி வெளியிட்டு உள்ளது.

அதுமட்டுமல்லாமல் உக்ரைன் மீதான இந்த இரக்கமற்ற போரை நியாயப்படுத்தும் அடிப்படையிலான அனைத்து காரணங்களையும் கிம்ஜாங் உன் ஆதரித்துள்ளார். அவர் கூறியதாவது , ரஷ்யா தன் நாட்டின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் பாதுகாக்கும் முறைகளை நன்கு அறிந்திருந்தது. இதன் காரணமாக ரஷ்யாவால் தன் இலக்கை அடைவதில் பெரும் வெற்றியைப் பெறமுடிந்தது. வடகொரிய மக்கள் ரஷ்யமக்களுக்கு முழுஆதரவு மற்றும் ஊக்கத்தை அளிக்கின்றனர். கொரியா மற்றும் ரஷ்யா இடையில் நட்புறவு மற்றும் ஒத்துழைப்பிற்கான உறவுகளை தான் வெளிப்படுத்துகிறேன். ஏப்ரல் 2019ல் விளாடிவோஸ்டாக்கில் நடைபெற்ற எங்கள் முதல் சந்திப்பிற்கு பின், இது இருநாட்டு வளர்ச்சியில் புது தீவிரமான திருப்பத்தை ஏற்படுத்தியது. நம் இரண்டு நாடுகளும் தொடர்ந்து அனைத்து துறைகளிலும் வீரியத்துடன் வலுப்பெறும். உலக பாதுகாப்பை உறுதிசெய்யவும், சர்வதேச நீதியைப் பாதுகாப்பதற்கான பயணத்திலும் இருநாடுகளுக்கும் இடையேயான ராஜாங்க ஒத்துழைப்பு நெருக்கமாக இருக்கும் என்று தெரிவித்தார்.