• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஹீரோயின் லுக்கில் குஷ்பூ

By

Sep 4, 2021 , ,

குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் மஞ்சள் நிற புடவையில் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் 80, 90 – களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. அவருக்கு மட்டுமே தமிழக ரசிகர்கள் கோவில் கட்டினர். திரையரையுலகில் மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோதே, இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்துகொண்டார். அதன் பின், அவ்வப்போது, அவருக்கு ஏற்றவாறு கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் இடையை குறைத்து சில அட்டகாசமான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டார். அந்த வகையில், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் மஞ்சள் நிற புடவையில் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. வர வர குஷ்புவின் வயது குறைந்துக்கொண்டே வருவதாக நெட்டிசன்கள் பதில் கொடுத்து வருகின்றனர்.