• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கப்பலூர் சுங்கச்சாவடிவிவகாரம் – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கைது

ByA.Tamilselvan

Jul 4, 2022

மதுரை திரமங்கலம் அருகேயுள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மறியல் போராட்டம் நடத்தினார். இதனால் அவரை போலீஸார் கைது செய்தனர்.
திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி விதிமுறைகளுக்கு முரணாக இருப்பதாக கூறி அதை இடமாற்றம் செய்யக் கோரியும், தேசிய நெடுஞ்சாலை 208 வழியாகச் செல்லும் மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்ட வாகனங்களுக்கு கட்டண விலக்கு கோரி பல கட்ட போராட்டம் நடைபெற்றது.


மதுரை மாவட்ட கலெக்டர் முன்னாள்,இந்நாள் அமைச்சர்கள் பல முறை பேச்சு வார்த்தை நடத்தியும் இந்த பிரச்சனை தீர்ந்தபாடில்லை.மேலும் மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் செலுத்த முடியாது என முற்றுகையிட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் டோல்கேட் அமைந்துள்ள பகுதி கப்பலூர் பஞ்சாயத்துக்கு உட்பட்டது. அதற்கான கட்டணம் பல கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது டோல்கேட் நிர்வாகம். இது போன்ற பல பிரச்சனைகளுக்கு காரணமான டோல்கேட்டை அகற்ற கோரி பல முறை போராட்டம் நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை. திமுக அட்சிக்கு வந்ததும் கப்பலூர் டோல்கேட் அகற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அகற்றப்பட வில்லை.


இந்நிலையில் இன்று காலை முன்னாள் அமைச்சரும் திருமங்கலம சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் டோல்கேட் முன்பு மறியலில் ஈடுபட்டார் . அவருடன் அதிமுக தொண்டர்கள் மற்றும் திருமங்கலம் பொதுமக்கள், வாகன ஓட்டுனர் கள் உட்பட நூற்றுக்கானக்கானோர் மறியில் பங்கேற்றனர். அவரை போலீசார்
சமாதனப்படுத்த முயற்சித்தனர்.ஆனால் அதனை அவர் ஏற்றுக்கொள்ள மறுத்து தொடர் மறியலில் ஈடுபட்டதில் அவரை போலீசார் கைது செய்தனர்.