விருதுநகர் கட்டபொம்மன் தெருவில் உள்ள அருள்மிகு விநாயகர், கருப்பசாமி கோயில் கும்பாபிஷேம், யாகம் வளர்க்கப்பட்டு சிவாச்சாரியார்கள் தலைமையில் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் விருதுநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் பாண்டுரங்கன், கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

கோவில் நிர்வாகம் சார்பில் பாண்டுரங்கன் அவர்களுக்கு பரிவட்டம் கட்டி,மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அவருடன் சிறு பான்மை அணி மாநில செயலாளர் பிரான்சிஸ் , மாவட்ட பொது செயலாளர் காளீஸ்வரி,ஆன்மிக பிரிவு மாவட்ட தலைவர் சுப்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். பாரதிய ஜனதா கட்சி ஊடக பிரிவை சேர்ந்த சக்தி சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.







