முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி
மதுரை வடக்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர் திமுக சார்பில் கருணாநிதியின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் தலைமையில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் ஆகியோர் முன்னிலையில் திமுகவினர் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் பேரூராட்சி துணைத் தலைவர் லதா கண்ணன் கவுன்சிலர்கள் முத்து செல்வி சதீஷ் சிவா குருசாமி செல்வராணி நிஷா கௌதம ராஜா நிர்வாகிகள் அவை தலைவர் தீர்த்தம் என்ற ராமன் மாவட்ட பிரதிநிதி பேட்டை பெரியசாமி முன்னாள் பேரூர் செயலாளர் முனியாண்டி மகளிர் அணி சந்தான லட்சுமி சசிகலா சக்கரவர்த்தி எஸ் எம் பாண்டியன் திருவேடகம் ராஜா என்ற பெரிய கருப்பன் செங்குட்டுவன் நூலகர் ஆறுமுகம் சபாபதி சௌந்தரபாண்டி பேட்டை இரண்டாவது வார்டு அழகர் நாகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் சோழவந்தான் பேருந்து நிலையம் அருகில் திமுக விவசாய அணி சார்பில் விவசாய அணி பேரூர் துணைச் செயலாளர் சங்கங் கோட்டை சந்திரன் ஏற்பாட்டில் கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. வார்டு செயலாளர் ரவி கண்ணதாசன் சசிகலா சக்கரவர்த்தி உள்படப்பலர் கலந்து கொண்டனர்.