கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகேயுள்ள அவிலா சிறப்புப் பள்ளியில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி நகர திமுக சார்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு கன்னியாகுமரி நகர்மன்றத் தலைவர் குமரி ஸ்டீபன் தலைமை வகித்தார். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ஆர்.மகேஷ் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கினார்.

இந்நிகழ்வில், அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலர் பா.பாபு, அருட் சகோதரி லைலெட், நகர்மன்ற உறுப்பினர்கள் இக்பால், பூலோகராஜா, ஆட்லின், டெல்பின் ஜேக்கப், இந்திரா, ராயப்பன், முன்னாள் கவுன்சிலர் டி.தாமஸ், திமுக நிர்வாகிகள் எம்.ஹெச்.நிசார், பி.ஆனந்த், ஷ்யாம், கெய்சர்கான், புஷ்பராஜ், பிரேம் ஆனந்த், அகஸ்தியலிங்கம், ஜே.ஜே.ஆர்.ஜஸ்டின், அலாஜியஸ், சார்லஸ், செய்யது அலி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.