• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஓடிடி இயக்குனராகி வரும் கார்த்திக் சுப்புராஜ்

பீட்சா’ படம் மூலம் சினிமா ரசிகர்களை தன்பக்கம்திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். 2012ல் வெளியான அந்தப் படத்திற்குப் பிறகு 2014ல் அவர் இயக்கிய ‘ஜிகர்தன்டா’ படமும் பெரிய வரவேற்பைப் பெற்று, இரண்டு தேசிய விருதுகளையும் பெற்றது.

அதன்பின் அவர் இயக்கிய ‘இறைவி, மெர்க்குரி’ ஆகிய இரண்டு படங்களும் வர்த்தக ரீதியாக வெற்றி பெறவில்லை.

இருந்தபோதும் 2019ல் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தை இயக்கும் வாய்ப்பு கார்த்திக் சுப்பராஜுக்குக் கிடைத்தது. அந்தப் படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையவில்லை அதன் பின்னர் குறிப்பிடும்படியாக படங்களை சுப்புராஜ்இயக்கவில்லை

2020ம் வருடம் ஓடிடியில் வெளிவந்த ‘புத்தம் புது காலை’ ஆந்தாலஜி, படத்தில் ‘மிராக்கிள்’ என்ற ஒரு குறும்படத்தையும், 2021ல் வெளிவந்த மற்றொரு ஆந்தாலஜி படமான ‘நவரசா’வில் ‘பீஸ்’ என்ற குறும்படத்தையும் இயக்கினார்.மேலும், முதல் முறையாக தனுஷுடன் இணைந்த ‘ஜகமே தந்திரம்’ படம் கடந்த வருடம் ஓடிடி தளத்தில் வெளியாகி கடும் விமர்சனங்களைச் சந்தித்தது.

அடுத்து விக்ரம், அவரது மகன் துருவ் ஆகியோர் நடிக்கும் ‘மகான்’ படத்தை இயக்க ஆரம்பித்தார் கார்த்திக். குறுகிய காலத்தில் அப்படம் எடுத்து முடிக்கப்பட்டது. ஆனால், இந்தப் படமும் அடுத்த மாதம் பிப்ரவரி 10ம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போகிற போக்கைப் பார்த்தால் சின்னத்திரை இயக்குனர்கள், திரைப்பட இயக்குனர்கள் என இருப்பதை போன்று ஓடிடி பட இயக்குனர்கள் என்பதற்கு கார்த்திக் சுப்புராஜ் தலைமை தாங்குவாரோ என இப்போதே கோடம்பாக்க சினிமாவில் விவாதம் தொடங்கியிருக்கிறது.