• Fri. Mar 31st, 2023

வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி..!

Byவிஷா

Jul 5, 2022

இயக்குனர் மணிரத்னத்தின் கனவுப் படமான, கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து பொன்னியின் செல்வன் படத்தை இயக்கியிருக்கிறார. இப்படத்தின் முதல் பாகம் ரிலீஸ{க்கு தயாராகி விட்டது.
இந்நிலையில் படத்தில் வரும் கதாபாத்திரங்களின் போஸ்டர்களை வெளியிடத் துவங்கியுள்ளனர். ஆதித்த கரிகாலனாக நடித்திருக்கும் விக்ரமின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. விக்ரமுக்கு அந்த கதாபாத்திரம் பொருத்தமாக இருப்பதாக சினிமா ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பொன்னியின் செல்வனில் மிகவும் முக்கியமான கதாபாத்திரமான வந்தியத்தேவனின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். கார்த்தி தான் வந்தியத்தேவனாக நடித்திருக்கிறார். வந்தியத்தேவனின் போஸ்டரை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,
பொன்னியின் செல்வன் நாவலை படித்த அனைவரும் வியந்து போனது வந்தியத்தேவனை பார்த்து தான். அந்த வந்தியத்தேவனாக நீங்கள் அருமையாக இருக்கிறீர்கள். படத்தில் எப்படி நடித்திருக்கிறீர்கள் என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறோம். போஸ்டரை இன்னும் சிறப்பாக டிசைன் செய்திருக்கலாம். விக்ரமின் ஆதித்ய கரிகாலன் போஸ்டரை போன்றே இருக்கிறது.
பொன்னியின் செல்வன் நாவலை படித்து அதன் மீது அன்பு கொண்டோம். அத்தகைய நாவலை படமாக பார்க்க துடித்துக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *