அரியலூர் மாவட்ட அரெஷிடோ இஷின்றியூ கராத்தே கழகம் சார்பில், மாநில அளவிலான நான்காவது ஆண்டு கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகள் வாணி மகாலில் நேற்று நடைபெற்றது.

உலகப் புகழ்பெற்ற மறைந்த சிகான் ஹுசைனி நல்லாசியுடன், மாநில அளவிலான இப் போட்டியில் திருச்சி, தஞ்சாவூர்,நாகை, மயிலாடுதுறை,திருவாரூர் மன்னார்குடி கும்பகோணம் நெல்லை சென்னை கடலூர் பெரம்பலூர் சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 900 மேற்பட்ட, 5 வயது முதல் 15 வயதுடைய பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.நிகழ்ச்சிக்குசிகான் ஹுசைனி இஷின்றியூ கராத்தே கராத்தே கழகத்தின் தலைமை கட்டுப்பாட்டாளர் ஹன்ஷி வி செல்லபாண்டியன்,
அகில இந்திய இஷின்றியூ கராத்தே& கோபுடோ அசோசியேஷன் தலைவர் டாக்டர் ஹனிபா ஹுசைனி கோஷ்,அகில இந்திய இஷின்றியூ கராத்தே & கோபுடோ அசோசியேஷன் பொருளாளர் மலர்விழி , தலைமை பயிற்றுவிப்பாளர் ஹன்சி கே ராஜகோபால் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர்.

கராத்தே போட்டியினை, நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஸ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி தொடங்கி வைத்தார்.தொடர்ந்து நடுவர்கள் முன்னிலையில், நடந்த பல்வேறு சுற்றுகளில், இருவர் இருவராக மாணவ மாணவியர்கள் மோதினர் .முன்னதாக நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் தலைமை பயிற்று விப்பாளர் ரென்ஷி சங்கர் வரவேற்றார்.
முடிவில் போட்டிகளில் வென்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளை , மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேகலீசன் வழங்கி பாராட்டினார்.





