• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி – இராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் திருத்தல தேவாலய கொடியேற்றம்

கன்னியாகுமரி மாவட்டம் இராஜாவூர் புனித மிக்கேல் அதி தூதர் தேவாலயத்தின் திருவிழாவின் முதல் நாள் திருக்கொடியேற்றம் நேற்று மாலை நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற கிறிஸ்தவ தேவாலயங்களில் மிக பிரசித்தி பெற்ற தேவாலயம்.இராஜாவூர் புனித மிக்கேல் அதி தூதர் தேவாலயத்தின் இவ்வாண்டின் பத்து நாட்கள் திருவிழா (05.05.23_14.05.23) திருவிழாவின் முதல் நாள் திருக்கொடியேற்றம் நேற்று (மே.5)ம் தேதி மாலை.கோடடாற் மறைமாவட்ட ஆயர் முனைவர் நசரேன் சூசை கொடியை இயற்றிவைத்து திருவிழா வின் முதல் திருப்பலியை நடத்தினார்.

இந்த நிகழ்வில்.தேவாலைய பங்கு தந்தை,இணை பங்கு தந்தை ஆகியோர் பங்கேற்றனர்.
இராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழாவில் குமரி மாவட்டத்தை சேர்ந்த பல் சமுகம் மக்கள் பங்கேற்புடன்.அண்டை மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, தென்காசி பகுதிகளை சேர்ந்த பக்தர்களோடு,அண்டை மாநிலமான கேரளாவை சேர்ந்த பல் சமுக மக்கள் பங்கேற்பது பன்னெடும் காலமாக தொடரும் நிகழ்வு. திருவிழா நாட்களில் தினமும் செபமாலை, மறையுரை,திருப்பலியுடன், மாலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் பேச்சு போட்டி, கலைநிகழ்ச்சிகள் உடன் சிறப்பு பரிசுகளும் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்படும்.எதிர் வரும் மே 14_ம் தேதி காலை திருத்தேர் பவனியும் மாலை தேரில் நடக்கும் திருப்பலியில் இராஜாவூர் மண்ணின் மைந்தர்கள் ஆன அருட் குருக்கள் பங்கேற்கும் திருப்பலியுடன் திருவிழா நிறைவு பெறும்.