தமிழ்நாட்டில் ஆன்லைன் மூலம் மருந்து விற்க தடை செய்ய வேண்டும் என வணிகர்கள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நேற்று வணிகர்கள் தினத்தையொட்டி ஈரோட்டில் டெக்ஸ்வேலியில் வணிகர்கள் மாநாடு நடைபெற்றது. வணிகர்கள் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். மாநாட்டுக்கு பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கினார். மாநாட்டில் அமைச்சர்கள் சு.முத்துசாமி, மா.சுப்பிரமணியன், வி.செந்தில்பாலாஜி, பி.மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அந்த வகையில் ஆன்லைன் மருந்து விற்பனையால் வணிகர்கள் பாதிக்கப்படுவதால் அதற்கு தடை வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.