தமிழக அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்னை துணை முதல்வராக, முதல்வர் ஸ்டாலின் அறிவித்த நிலையில், இன்று பிற்பகல் புதிதாக நான்கு அமைச்சர்கள் பதவி ஏற்றதை கொண்டாடும் வகையிலும், கன்னியாகுமரி ரவுண்டானா பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு முன்பாக, அகஸ்தீஸ்வரம் தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் பாபு தலைமையில், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் , திமுக பேரூராட்சி கவுன்சிலர்கள், கட்சியின் பல்வேறு பொருப்பாளர்கள். கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் தாமஸ் ஆகியோர். அமைச்சர் உதயநிதி அதிகார பூர்வமான தமிழிக அரசின் துணை முதல்வராக உயர்த்த பட்டதை கொண்டாடும் வகையில், கன்னியாகுமரி ரவுண்டானா பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, பாட்டாஸ் வெடித்து கொண்டாடியதுடன், கன்னியாகுமரி சிறப்பு பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் முன்னிலையில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு சுற்றுலா பயணிகளுக்கு இனிப்பு கொடுத்தும் துணை முதல்வரின் பதவியேற்பு வைபவத்தை கொண்டினார்கள்.


