• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நாகர்கோவிலில் கனிமொழி எம்பி செய்தியாளர்கள் சந்திப்பு.

தி மு க , ஒவ்வொரு தேர்தலில் போதும் மக்கள் கருத்தை கேட்டு தேர்தல் அறிவிப்பை தயாரிப்பதை தலைவர் கலைஞர் வழக்கமாக கொண்டிருந்தார்.

தமிழக முதல்வர் அண்ணன் ஸ்டாலின் மக்களவை தேர்தலில் அறிக்கை தயாரிப்பதற்காக ஒரு குழுவை ஏற்படுத்தி,தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சுற்று பயணம் சென்று பல்வேறு நிலைகளில் உள்ள மக்கள் ,தனி அமைப்புகள், குழுக்கள்,ஏன் ஒரு தனி மனிதனின் கருத்தையும் கேட்டு அதன் பின் தேர்தல் அறிக்கை தயாரிக்க திட்டமிட்டு அதன் படி நாங்கள் நேற்று தூத்துக்குடி, இன்று(பெப்ரவரி_6)ல் குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு குழுக்கள், அமைப்புக்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு பட்ட நிலையினரை சந்தித்தோம் என செய்தியாளர்களிடம் தெரிவித்தவர். அதன் பின் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு தெரிவித்தவை..,

நாடாளுமன்றத்தில் பிரதமர் உறை என்பதில் எதிர் கட்சிகளை பற்றி குறை சொல்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். பிரதமரின் 10_ஆண்டு சாதனைகளை சொல்ல ஒன்றுமில்லாத தால்.60_ஆண்டுகள் ஆட்சி செலுத்தியவர் களை பற்றிய குறை சொல்வதே பிரதமரின் வேலையாக இருக்கிறது

சண்டிகர்மாநிலத்தில் நடந்த மேயர் தேர்தலில் பாஜக செய்த ஜனநாயக கொடுமையை. சில நேரங்களில் நியாயத்தை நிதிமன்றங்கள் சொல்லுகிறது.

ஒரே நாடு,ஒரே குடும்ப அட்டை,ஒரே உணவு,ஒரே கோயில் என சொல்லும் பாஜக,ஒரே நாளில் நாடு முழுவதும் தேர்தல் நடத்த முடியாது என்பதே 7 கட்டத் தேர்தல் என்ற அறிவிப்பு சொல்லும் உண்மை. மாநிலத்தின் ஆட்சியை எல்லாம் அகற்றி விட்டு ஒரே தேர்தல் நடத்துவார்களோ!.மாநிலங்களின் அடிப்படை உரிமைகள் எல்லாம் சிதைத்து விடுவதே அவர்களது கோசத்தின் பின் இருக்கும் உண்மை.

மத அரசியல்,தாழ்வு மனப்பான்மை,கல்வி,வேலை வாய்ப்பு இன்மையை எல்லாம் உருவாக்குவதே இவர்களின் நோக்கம் என கனிமொழி தெரிவித்தார்.